বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 03, 2020

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா!

இன்று காலை கொரோனா தொற்றால் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான கமல் ராணி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
இந்தியா Posted by

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது டிவிட் செய்துள்ளார். 

“எனது உடல்நிலை நன்றாக உள்ளது. ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட  அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என அமித்ஷா இந்தியில் டிவிட் செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 17.50 லட்சத்தினை கடந்துள்ளது. இதுவரை 37,364 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இன்று காலை கொரோனா தொற்றால் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான கமல் ராணி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement