This Article is From Jul 23, 2018

கும்பல் தாக்குதல் தடுப்பு பிரிவின் தலைவராக ராஜ்நாத் சிங் நியமனம்

கும்பல் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை மேற்பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நியமிக்கப் பட்டுள்ளார்

New Delhi:

புதுடில்லி: கும்பல் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை மேற்பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நியமிக்கப் பட்டுள்ளார்.

நாட்டில் தொடர்ந்து கும்பல் கொலைகள் நடைப்பெற்று வருகிறது. குறிப்பாக பொய் செய்திகளினால் இது போன்ற சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்கின்றன. இந்த தாக்குதல்களைத் தடுக்க, முக்கிய அமைச்சர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதன் தலைவராக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நியமிக்கப் பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக கும்பல் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டு பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

tat1qijg

மேலும், இதனைக் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனத்தை வைத்தனர். “இது போன்ற சம்பவங்கள் நடைப்பெறாமல் இருக்க, தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும். அதற்கான சட்டங்கள் கொண்டு வர வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் வற்புறுத்தியது

பசுவதை தாக்குதல்களை கண்டிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் மனு அளித்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து நான்கு வாரத்திற்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

.