This Article is From Jun 17, 2019

வீட்டிலேயே தயாரிக்கலாம் ப்ரோட்டின் பௌடர்!!!

ஆரோக்கியமும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கும் ப்ரோட்டின் பௌடரை சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது.

வீட்டிலேயே தயாரிக்கலாம் ப்ரோட்டின் பௌடர்!!!

ஹைலைட்ஸ்

  • ஒரு க்ளாஸ் பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.
  • உடல் எடை குறைக்க இதனை அடிக்கடி சாப்பிடலாம்.
  • உடற்பயிற்சிக்கு பின் இதனை சாப்பிட உடல் வலுவாகும்.

உடல் எடை குறைத்து ஸ்லிமாக உங்கள் தோற்றத்தை மாற்ற புரதம் நிச்சயம் தேவை.  தசைகளை உறுதியாக்கவும் உடல் எடை குறைக்கவும் நீங்கள் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.  இயற்கையான ப்ரோட்டின் பௌடரை தயார் செய்வது மிகவும் எளிமையானது.  ஆரோக்கியமும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கும் ப்ரோட்டின் பௌடரை சாப்பிடுவதால் உடல் எடை குறைகிறது.  சத்துமாவை எப்படி தயார் செய்வதென்று பார்ப்போம்.  

தேவையான பொருட்கள்: 
கடலை மாவு - ஒரு கப் 
பாதாம் - 1/2 கப் 
வால்நட் - 1/2 கப் 
பிஸ்தா - 1/2 கப் 
இஞ்சி தூள் - 2 தேக்கரண்டி 
சோம்பு - 1/2 தேக்கரண்டி 
ஜாதிக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி 
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி 
குங்குமப்பூ - 1 மேஜைக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1 மேஜைக்கரண்டி 
 

0f3ddf5g

 செய்முறை: 
மேற்கூறிய பொருட்களையெல்லாம் லேசாக வறுத்து கொள்ளவும்.  நல்ல வாசனை வரும்வரை வறுத்து கொள்ளவும்.  எல்லாவற்றையும் நன்கு அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.  மிகவும் லேசாக அரைத்தால் விதைகளில் இருந்து எண்ணெய் வெளியேறும் என்பதால் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.  இரவு நேரத்தில் ஊறவைத்து பின் காயவைத்து அரைத்து எடுத்து வைத்தால் இது போன்று ஆகாது.  மேலும் செரிமானமும் எளிமையாகும்.  இதனை பாலில் காய்ச்சி குடிக்கலாம்.  குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.  

.