This Article is From Apr 07, 2019

ம.பி. முதல்வரின் சிறப்பு அதிகாரிகள் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு!

சட்டவிரோத பரிவர்த்தனை மேற்கொண்டதாக கூறப்படும் வழக்கில் தொடர்புடையதாக, இந்தூரில் உள்ள பிரவீன் காக்கர் வீடு, டெல்லியில் உள்ள ஆர்.கே.மிக்லானி வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கமல்நாத்தின் உதவியாளர் பிரவீன் காக்கர் வீட்டில் அதிகாரிகள் சோதனை.

ஹைலைட்ஸ்

  • 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை, 9 கோடி சிக்கியுள்ளதாகவும் தகவல்
  • இந்த சோதனைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை என கூறப்படுகிறது.
  • 2 அதிகாரிகளின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
New Delhi/Bhopal:


மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் சிறப்பு அதிகாரிகள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கமல்நாத் சிறப்பு பணி அதிகாரியான பிரவீன் காக்கரின் இந்தூர் வீட்டிலும் முன்னாள் ஆலோசகர் ராஜேந்திர குமார் டெல்லி வீட்டிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. இது ஹவாலா வழக்கில் தொடர்புடைய காரணத்திற்காக மேற்கொள்ளப்படும் சோதனை என கூறப்படுகிறது.

இதேபோல், போபால், இந்தூர், கோவா மற்றும் டெல்லி உள்பட 50க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரை ரூ.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

lmi4her8

டெல்லியில் இருந்து 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தவிர்த்து ஷோரூம் ஒன்றிலும் மற்றும் பிற இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

இதேபோல், பெரும் நிறுவனங்களான அமிரா குரூப், மோஸர் பயர், ரத்கூல் பூரி போன்ற நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.  500க்கும் அதிகமான அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தேர்தல் நேரத்தில் பழிவாங்கும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

.