This Article is From Jul 04, 2018

வதந்திகளைப் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு

வதந்திகள், வன்முறையைத் தூண்டும் தகவல்களை பரப்பாமல் இருக்க ‘வாட்ஸ் அப்’ நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

வதந்திகளைப் பரப்புவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு
New Delhi:

வதந்திகள், வன்முறையைத் தூண்டும் தகவல்களை பரப்பாமல் இருக்க ‘வாட்ஸ் அப்’ நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வன்முறை சம்பவங்களுக்கும், அப்பாவி மக்கள் அடித்து கொலை செய்யப்படுவதற்கும் வாட்ஸ் அப்பில் வரும் பொய் தகவல்கள் தான் காரணம் என மத்திய தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

பொய் தகவல்களை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. அதற்கு பதில் அளித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், “வாட்ஸ் அப்பில் பகிரப்படும் பொய் தகவல்களை தடுப்பது சவாலாக உள்ளது. வதந்திகளை தடுக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் ஒத்துழைக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

200 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தியாவில் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். இதில் வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் சில யோசனைகளை முன்வைத்ததுள்ளது.

செய்தியை பகிர்வதற்கும், எழுதுவதற்குமான புதிய ஹைலைட்ஸ் வைக்கப்படும். இது, பிறர் அனுப்பும் செய்தியை மற்றவர்களுடன் பகிர்வதற்கு முன், வாடிக்கையாளர்களை யோசிக்க தூண்டும். இதன் மூலம், பொய்யான செய்திகள் பரவுவதை குறைக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஓராண்டில் மட்டும், பொய் தகவல்களினால் 30-க்கும் மேற்பட்டவர்கள் அடித்து, வன்முறையினால் உயிரிழந்துள்ளனர் என ஊடக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த வாரம் வாட்ஸ் அப், குழு பயன்பாட்டை அப்டேட் செய்தது. இதில், குழுவில் அனுப்பப்படும் செய்திகளை குழு அட்மின் சரிபார்த்து தகவல்களை பரிமாறலாம். இதனால் தேவையற்ற செய்திகள் பரவுவதை தடுக்கலாம்.
 

.