Read in English
This Article is From Mar 07, 2020

சொகுசு காரை அப்பளமாக நொறுக்கிய ரயில்! அதிர்ஷ்டவசமாகத் தப்பிய டிரைவர்!! #ViralVideo

விபத்தால் சொகுசு கார் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இருப்பினும் அதிலிருந்த டிரைவருக்கு பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

Advertisement
விசித்திரம் Edited by

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Highlights

  • சொகுசு கார் கடுமையாக சேதடைந்து உருக்குலைந்து போனது
  • டிரைவருக்கு சிராய்ப்பு காயங்கள் மட்டுமே ஏற்பட்டது
  • காயமடைந்த மறுநாளே டிரைவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ரயில் ஒன்று சொகுசு காரை அப்பளமாக நொறுக்கிய சம்பவம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்திருக்கிறது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இந்த வீடியோ காட்சியை லாஸ் ஏஞ்செல்ஸ் போலீசார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

கே.டி.எல்.ஏ. செய்தி நிறுவனத்தின் தகவல்படி, சம்பவம் செவ்வாயன்று காலை 11 மணிக்கு தெற்கு லாஸ் ஏஞ்செல்ஸ் பகுதியில் நடந்திருக்கிறது. 

சாலையில் மிகுந்த கவனத்துடன் கார்களை ஓட்ட வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர். 

Advertisement

'இது துயரமான சம்பவமாக மாறியிருக்கும். அதிர்ஷ்ட வசமாக டிரைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஆனால் இது எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. ரயில் தண்டவாளத்தின் அருகே கார் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். எப்போதும் சாலைப் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்க வேண்டும்' என்று லாஸ் ஏஞ்செல்ஸ் போலீசார் தங்களது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. எப்படி டிரைவர் தப்பித்தார் என நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். 

இந்த வீடியோவை போலீஸ் துறையின் துப்பறிவாளர் மோசஸ் கேஸ்டில்லோவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருக்கு டிரைவர் உயிர் தப்பியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

.

டிரைவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. சிகிச்சைக்குப் பின்னர் புதன்கிழமை டிரைவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

Advertisement