This Article is From Aug 12, 2019

“2 முட்டை ரூ.1,700…”- அதிர்ச்சி கொடுக்கும் ஓட்டல் பில்!

மும்பையில் இருக்கும் ‘ஃபோர் சீசன்ஸ்’ ஓட்டலில்தான் இப்படி பில் போடப்பட்டுள்ளதாக புகைப்படக் கலைஞரான கார்திக் தர் கூறியுள்ளார்

“2 முட்டை ரூ.1,700…”- அதிர்ச்சி கொடுக்கும் ஓட்டல் பில்!

அவரது ட்வீட்டுக்குத் தொடர்ந்து பலர் லைக்ஸ் போட்டு வருகின்றனர். பலரும் அதை பகிர்ந்தும், அது குறித்து கருத்திட்டும் வருகின்றனர்

Mumbai:

சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர், ராகுல் போஸ், சண்டிகரில் இருக்கும் ஓர் ஓட்டலில் இரண்டு வாழைப் பழங்கள் சாப்பிட்டது குறித்தும், அதற்கு 442 ரூபாய் பில் போடப்பட்டது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது அவரது பதிவு. தற்போது டெல்லியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர், மும்பையில் இருக்கும் ஓர் நட்சத்திர ஓட்டலில் தான் சாப்பிட்ட 2 முட்டைகளுக்கு 1,700 ரூபாய் பில் போடப்பட்டுள்ளதாக பரபரப்புக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

மும்பையில் இருக்கும் ‘ஃபோர் சீசன்ஸ்' ஓட்டலில்தான் இப்படி பில் போடப்பட்டுள்ளதாக புகைப்படக் கலைஞரான கார்திக் தர் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சகோதரரே, வாருங்கள் போராட்டம் செய்வோம்” என்று கூறி, ராகுல் போஸையும் டேக் செய்துள்ளார். அவரது ட்வீட்டுக்குத் தொடர்ந்து பலர் லைக்ஸ் போட்டு வருகின்றனர். பலரும் அதை பகிர்ந்தும், அது குறித்து கருத்திட்டும் வருகின்றனர். 
 

நடிகர் ராகுல் போஸ், சண்டிகரில் இருக்கும் ஜே.டபள்யூ.மேரியட் ஓட்டல் குறித்து புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த ஓட்டலுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

ராகுல் போஸின் ட்வீட்டைத் தொடர்ந்து பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன. ட்விட்டர் வாசிகள், மீம்ஸ்களில் ‘ராகுல் போஸ் மொமென்ட்' என்ற டெம்ப்ளேட்டையே உருவாக்கிவிட்டனர்.
 

.