This Article is From Dec 22, 2018

பிரான்ஸிற்கு இந்த நூற்றாண்டின் வெப்பமான வருடம் எது தெரியுமா…?

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கடுமையான வெயில் தாக்கம் இருந்தது.

பிரான்ஸிற்கு இந்த நூற்றாண்டின் வெப்பமான வருடம் எது தெரியுமா…?

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கடுமையான வெயில் தாக்கம் இருந்தது.

Paris:

பிரான்ஸ் நாட்டின் வானிலை ஆய்வு மையம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2018 ஆம் ஆண்டை இந்த நூற்றாண்டின்  ‘மிகவும் வெப்பமான வருடமாக' அறிவித்துள்ளது

‘1900 ஆம் வருடத்தில் இருந்து வெப்பநிலை அளவிடு கணக்கு உள்ளது. ஆனால் இந்த ஆண்டே மிகவும் அதிகமான வெப்ப நிலையை கெண்டுள்ளது' என மிடிரோ பிரான்ஸ் தெரிவித்தது.

சராசரியாக 14 டிகிரி சென்டிகிரேட் உள்ள வானிலை இந்த வருடம் 1.4 டிகிரி அதிகரித்துள்ளது. இது 1981-2010 ஆண்டின் சராசரி அளவைவிட இது அதிகமாக உள்ளது.மேலும் இதுவரை அதிகமான வெப்பமடைந்த ஆண்டாக கருதப்பட்ட 2014 மற்றும் 2011 ஆண்டுகளை விட இந்த வருடம் வெப்பநிலை அதிகமாக இருந்ததால் மக்களை அதிகம் பாதிக்கப்பட்டனர்.

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கடுமையான வெயில் தாக்கம் இருந்தது. தொடர்ந்து வந்த வெப்ப காற்றால்  சுமார் 15,000 மக்கள் இறந்த நிலையில், வறட்சியால் சுமார் 14 நபர்கள் இறந்தாக தகவல் வெளியானது.

‘இந்த ஆண்டு தொடர்ச்சியாக சுமார் 9 மாதங்கள் கடும் வெயிலின் தாக்கம் இருந்தது, இந்த நூற்றாண்டிலேயே இதுவே மிக அதிமான அளவு' என மிடிரோ பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

.