हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 30, 2018

மோடி பிரசாரம் செய்த இடத்தில் காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு வேண்டும் என்று வலியுறுத்தும் நிஸாத் கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

Advertisement
இந்தியா
Lucknow:

உத்தர பிரதேச மாநிலம் காஸிப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அங்கு காவலுக்கு வந்த போலீஸ் ஒருவர்மீது கல் தாக்கியதால், அவர் உயிரிழந்துள்ளார். அவரை தாக்கியது நிஸாத் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இந்த மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பு வேண்டும் என்று வலியுறுத்தும் ஒரு அமைப்பினர்.

11 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் சிலர் விடுவிக்கப்பட்டனர். கடந்த சில வாரங்களில் உத்தர பிரதேசத்தில் நடக்கும் இரண்டாவது போலீஸ் மரணம் இது. மாட்டிறைச்சி கூடாது எனக்கூறி நடந்த கலவரத்தில் ஒரு போலீஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்யும் இடத்திலிருந்து சில கிமீ தொலைவில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்களிடம் நிஸாத் கட்சியினர் தங்களது சக கட்சி பிரமுகரை விடுவிக்க சொல்லி மிரட்டியுள்ளனர். அதற்கு மறுத்ததால் போலீஸ் மீது கல்வீசியுள்ளனர். அப்போது காவல்துறை அதிகாரி சுரேஷ் வாட்ஸ் உயிரிழந்தார். தாக்கியவர்கள் நிஸாத் கட்சியினர் என சக போலீஸார்கள் உறுதி செய்தனர்.

Advertisement

ஆனால் நிஸாத் கட்சி தலைவர் சஞ்சய் குமார், பாஜக தேவையில்லாமல் இந்த விஷயத்தை தங்கள் பக்கம் திருப்புவதாக கூறியுள்ளார்.

காங்கிரஸும் யோகி ஆதித்யநாத்தின் அரசை "பொறுப்பற்ற அரசு" என்று கடுமையாக விமர்சித்துள்ளது. யோகி, "உயிரிழந்த காவலரின் மனைவிக்கு 40 லட்சமும், குடும்பத்துக்கு 10 லட்சமும் வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.

Advertisement
Advertisement