Read in English
This Article is From Jul 29, 2018

ஆதார் சாலஞ்ச்: ட்ராய் தலைவரின் ஆதார் எண் இணைக்கப்பட்ட தகவல்கள் பொது வெளியில் கசிவு

ட்ராய் தலைவர் ஷர்மா பொது வெளியில், தனது ஆதார் எண்ணை வெளிப்படுத்துவதானால் என்ன தீங்கு செய்ய முடியும் என்ற சவால் விடுத்திருந்தார்

Advertisement
இந்தியா
New Delhi:

புதுடில்லி: டிராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷர்மா, தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆதார் எண் மிகவும் பாதுகாப்பானது, பொது வெளியில் ஆதார் எண்ணை வெளிப்படுத்துவதானால் என்ன தீங்கு செய்ய முடியும் என்ற சவால் விடுத்திருந்தார்.

ஷர்மாவின் ட்வீட் சமூக வலைத்தளத்தில் வைரலானது. 3364 லைக்ஸ், 2850 ரீ-ட்வீட்ஸ் என இந்த சவால் குறித்து விவாதங்கள் எழுந்தன. ட்ராய் தலைவர் ஷர்மா வெளியிட்ட இந்த சவாலை குறித்து, பலரும் கருத்து தெரிவித்தனர். பொது வெளியில் ஆதார் எண்ணை பகிரும் போது தனி நபரின் புகைப்படங்கள், முகவரி, பிறந்த தேதி, சாட் தகவல்கள் ஆகியவை கண்டறியப்படும் என்று கருத்து தெரிவித்தனர்.

ட்விட்டரில், ஷர்மா ஆதார் எண்ண்ணை வெளியிட்ட ஒரு மணி நேரத்திலேயே, எலியட் ஆண்டர்சன் என்ற ட்விட்டர் கணக்கு பதிவு கொண்ட பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய தகவல்களை பதிவிட்டு அதிர்ச்சி அளித்தார். மேலும், பொது வெளியில் ஆதார் எண்ணை பகிர்வது ஆபத்து என்று எச்சரித்தார்.

இதனை தொடர்ந்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டது குறித்து ட்ராய் அமைப்பு தலைவர் ஷர்மா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆதார் எண் தகவல்கள் பாதுகாப்பானது என்று விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ட்விட்டர் நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Advertisement