This Article is From Nov 03, 2018

சூறாவளி பாதித்த வீட்டைச் சரிசெய்ய உதவிய ஜீப்கள்!

சூறாவளியினால் அவர்களின் வீடு ஒட்டு மொத்தமாக கவிழ்ந்த நிலையில் இருந்தது.அதை சீராக்க சுமார் 12,000 டாலர்கள் செலவு ஆகும் என்று எண்ணி கலங்கினர்

சூறாவளி பாதித்த வீட்டைச் சரிசெய்ய உதவிய ஜீப்கள்!

அமெரிக்காவிலுள்ள ஃபுளோரிடாவை சேர்ந்த டீரிக் மற்றும் அன்டிரியா கிளிஃப்டன், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவர்கள் வீட்டிலுள்ள சூறாவளி அலாரம் ஒலித்தது. வீட்டுக்கு திரும்பிய தம்பதிகள்,தங்கள் வீடு மைக்கில் என்னும் சூறாவளியால் பாதிப்படைந்த வீட்டைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்களின் வீடு மொத்தமாக கவிழ்ந்த நிலையில் இருந்தது.அதை சீராக்க சுமார் 12,000 டாலர்கள் செலவு ஆகும் என்று எண்ணி கலங்கினர்.மூன்று வாரங்களாகியும் சரிசெய்யபடாத நிலையில், அக்குடும்பத்தினருக்கு ஜாக்பார்ட் அடித்துள்ளது.

அங்குள்ள ஜலோபினிக் பத்திரிக்கையின் செய்தி படி, மைக்கில் என்னும் சூறாவளியால் ஃபுளோரிடா மாகாணமே அதிர்ந்து போனது என்று தெரிய வந்தது. அதன்பிறகு ,அங்குள்ள ஜீப் குழுவினர் ஒன்றிணைந்து, டீரிக் மற்றும் அன்டிரியா கிளிஃப்டனின் வீட்டை சரி செய்து தர முடிவு செய்தனர்.

 
 

டீரிக்கின் நண்பர் இதை கேட்டபோது பேய ஏரியா ஜீப் அஸோசியேசன் (association) சார்பாக அங்குள்ளவர்கள் ஒன்றிணைந்து தங்களது ஜீப்புகளை வைத்து சரிந்த வீட்டை அதன் பழைய நிலைக்கே திருப்ப முயற்சி செய்ய முடிவெடுத்தனர்.

அதன் படி டஸன் கணக்கான ஜீப் மற்றும் விராங்லர்கள் போன்ற வாகனங்களை   ஒன்றிணைத்து அந்த வீட்டை அதன் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்தனர்.

புயலினால் வீட்டை இழந்தவர்களுக்கு வீட்டைசரிசெய்து கொடுத்த சம்பவத்தினால் பேய ஏரியா ஜீப் அஸோசியேசனுக்கு அதன் முகநூல் பக்கத்தில் இவர்களுக்கு நற்பெயரும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

‘இது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான சம்பவம், இந்த உதவியால் என் மனதில் அவர்களுக்கு எப்பொழுதும் ஒரு இடமுண்டு' என வீட்டின் உரிமையாளர் டீரிக் ஜலோபினிக் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

Click for more trending news


.