பாப்கார்னை வெளியிலேடுக்க பேனா மூடி, டூத்பிக், கம்பித் துண்டு மற்றும் உலோக ஆணி ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளார்.
பிரிட்டிஷ் நாட்டில் ஒருவருக்கு பற்களின் இடையில் சிக்கிய பாப்கார்ன் மரணத்தை எல்லையை காட்டியுள்ளது. ஆடம் மார்ட்டின் (41) என்பவருக்கு பற்களுக்கு இடையில் சிக்கிய பாப்கார்ன் நோய்த்தொற்றை உருவாக்கியுள்ளது. பல்வேறு வகையான கருவிகளை பயன்படுத்தி எடுக்க முயற்சித்த பின்னர் திறந்த இதய அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியிருந்தது.
டெய்லி மெயில் படி, மார்ட்டினின் பல்லில் பாப்கார்ன் துண்டு 3 நாட்களாக பற்களில் சிக்கியிருந்தது. சிக்கியிருந்த பாப்கார்னை வெளியிலேடுக்க பேனா மூடி, டூத்பிக், கம்பித் துண்டு மற்றும் உலோக ஆணி ஆகியவற்றை பயன்படுத்தி வெளியே எடுக்க முயற்சித்தார்.
பாப்கார்னை வெளியே எடுக்கும் முயற்சியில் அவர் தனது ஈறுகளை சேதப்படுத்தினார். இதற்கிடையில் விதவிதமான பொருட்களை கொண்டு எடுக்க முயற்சித்ததில் நோய்த்தொற்றுக்கு வழிவகுத்தது. இறுதியில் இதயத்தின் தொற்று நோயாக எண்டோகார்டிடிஸ்க்கு வழிவகுத்தது. இது ரத்த ஓட்டத்தில் பரவும் பாக்டீரியாவினால் ஏற்படுகிறது.
ஒரு வாரத்திற்கு பின் மார்ட்டின் ஒரு இரவில் வியர்வை, சோர்வு மற்றும் தலைவலி ஆகியவற்றை அனுபவிக்கத் தொடங்கினார். மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தபோது இதயம் சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
“ஏதோ மோசமான தவறாக இருப்பதை உணர முடிந்தது. நான் மிகவும் பயங்கரமாக உணர்ந்தேன். கால் வலி அதிகமாகa இருந்தது. மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்” என்று கூறினார்.
நல்வாய்ப்ப்பாக மருத்துவர்களின் உதவியினால் காப்பாற்றப்பட்டேன். ஆனால், மரணத்தின் இறுதி வரை சென்று திரும்பியுள்ளேன் என்று கூறினார்.
Click for more
trending news