This Article is From Jun 01, 2018

டெல்லியில் தீ விபத்து.. 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றி அணைத்த வீரர்கள்!

பெரும் விபத்தைத் தடுப்பதற்காகவே அவசர கால நிலை கருதி இந்த ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது

டெல்லியில் தீ விபத்து.. 8 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றி அணைத்த வீரர்கள்!

The Indian Air Force helicopter made several sorties to pour water to contain the fire.

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் மாலவியா நகரில் தீவிபத்து
  • சமீபகாலத்தில் மிகப்பெரிய விபத்து இதுதான் என அறிவிப்பு
  • தீயை அணைக்க ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.
New Delhi: டெல்லியில் மாலவியா நகரில் நேற்று மாலை 5 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்துதான் சமீபத்தில் டெல்லியில் ஏற்பட்ட பெரும் விபத்தாகக் கருதப்படுகிறது. இதற்காக இன்று காலை ‘எம்.எல்.ஹெச்’ வகை ஹெலிகாப்டர்கள் தீயை அணைப்பதற்கான பணியில் ஈடுபட்டன.

டெல்லியின் மாலவியா நகரில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அருகில் பரவாமல் இருக்கவும், பள்ளிக்கட்டடம் அருகில் இருப்பதால் அதற்கு சேதாரம் ஏற்படாத வகையிலும், இன்று காலையில் தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன.

இந்தத் தீ விபத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கானப் பணிகளை செய்ய விமானப்படை அவசரமாக வரவழைக்கப்பட்டன. நேற்று மாலையிலேயே 80 தீ அணைப்பு வண்டிகள் விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டன.

இரவு முழுவதும் போராடியும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்து வந்தனர். இதையடுத்து அதிகாலையில் தீயை அணைக்க ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.
 
யமுனையில் இருந்து நீர் எடுத்துக்கொண்டு இன்று அதிகாலையில் டெல்லி மாலவியா பகுதியில் வந்து ஹெலிகாப்டர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. பல அடுக்கு தொட்டிகள் நிறைந்த இந்த ஹெலிகாப்டர் மூலம் சுமார் 8ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றி தீ அணைக்கப்பட்டது. இந்தியாவிலேயே ஒரு நகர்ப்புற பகுதியில் அதுவும் நாட்டின் தலைநகரமான டெல்லியில் இத்தகைய பெரும் விபத்து ஏற்பட்டதால் முதன்முறையாக தீ அணைப்பு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பெரும் விபத்தைத் தடுப்பதற்காகவே அவசர கால நிலை கருதி இந்த ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட குடோன் சட்டத்துக்குப் புறம்பான வகையில் செயல்பட்டு வந்துள்ளது. இதையடுத்து அக்கட்டட உரிமையாளர் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடியிருப்பு வாரியத்தின் முறையான அனுமதி உரிமை கட்டட உரிமையாளட் சஞ்சய் சைனியிடம் இல்லை. மேலும் தீயணைப்பு உபகரணங்கள் ஏதும் விதிமுறைகளின்படி அமைக்கப்படவில்லை. இந்த குடோனின் அருகில் வந்து நிறுத்தப்பட்ட ரப்பர் ஏற்றிவந்த லாரியில்தான் முதலில் தீ விபத்து ஏற்பட்டு பரவி உள்ளது என டெல்லி போலீஸார் தெரிவிக்கின்றனர்.
.