This Article is From Jan 30, 2019

ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது என பேசினால் அது எப்படி குற்றமாகும்? உயர்நீதிமன்றம் கேள்வி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று பேசினால் அது எப்படி குற்றமாகும்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது என பேசினால் அது எப்படி குற்றமாகும்? உயர்நீதிமன்றம் கேள்வி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய்வழக்கு பதிவதை தடுக்கக் கோரிய வழக்கின் விசாரணையில், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக கருத்து கூறுவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளதா என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசினாலோ, சமூக வலைதளத்தில் தகவல் அனுப்பினாலோ குற்றம் என்றால், ஸ்டெர்லைட் ஆலையை திறப்போம் என பேசுவதும், சமூக வலைதளங்களில் தகவல் அனுப்பவதும் குற்றம் தானே?

அப்படி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என கூறியவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? காவல்துறை அறிக்கையை பார்க்கும்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக செயல்படுவதுபோல் தெரிகிறது. மேலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பது ஏன்? என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கமாட்டோம் என ஆட்சியர் கூறுகிறார். அப்படியென்றால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கூறும் ஆட்சியர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்குமா? காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்; ஒருதரப்பினருக்கு சார்பாக செயல்படக்கூடாது.

மேலும் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து.

.