This Article is From Jun 11, 2020

ராயபுரம் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது எப்படி? உச்ச நீதிமன்றம் கேள்வி

அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தமிழக அரசின் நிலை என்ன?

Advertisement
தமிழ்நாடு Posted by

ராயபுரம் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது எப்படி? உச்ச நீதிமன்றம் கேள்வி

Highlights

  • ராயபுரம் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது எப்படி?
  • உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
  • கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தமிழக அரசின் நிலை என்ன?

சென்னனை ராயபுரம் அரசு காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது எப்படி? என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. 

சென்னை, ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்த வழக்கு விசாரணையில், அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தமிழக அரசின் நிலை என்ன? இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். 

காப்பாக வார்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு கூறப்பட்டுள்ளது. 

Advertisement

எப்படி இது நடந்தது? என தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் இதுகுறித்து வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

Advertisement