This Article is From Jun 15, 2020

ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

அவருக்கு சோதனை நடத்தியதில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்புடைய குழந்தைகளுக்கும் சோதனை நடத்தியதில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 

ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை, ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 35 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி பெரும் கவலையை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து, இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியது. 

உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் நடந்த வழக்கு விசாரணையில், அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து தமிழக அரசின் நிலை என்ன? இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். 

காப்பாக வார்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு கூறப்பட்டுள்ளது. 

எப்படி இது நடந்தது? என தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம் இதுகுறித்து வரும் திங்கள்கிழமைக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. 

இந்நிலையில் இன்று தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ராயபுரம் காப்பகத்தில் முதலில் ஒரு குழந்தைக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. '

அவருக்கு சோதனை நடத்தியதில் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் தொடர்புடைய குழந்தைகளுக்கும் சோதனை நடத்தியதில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து நோய் தாக்கத்தை பொறுத்து குழந்தைகள் பிரித்து வைக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, பராமரிக்கப்படுகிறார்கள் என விளக்கம் அளித்துள்ளது. குழந்தைகள் காப்பகம் முழுவதுமாக சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் குழந்தைகள் காப்பகத்தில் நோய் தொற்று பரவியது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 

மேலும் சென்னைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் மீட்கப்பட்டு தங்க வைப்பதால் எங்கிருந்து தொற்று பரவியது என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

.