This Article is From Jun 10, 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகள் எவ்வளவு? தமிழக அரசு

ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகள் எவ்வளவு? தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்பாட்டு பகுதிகள் எவ்வளவு? தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது படிப்படியாக கட்டுப்பாடுகள்
தளர்த்தப்பட்டு வருகிறது. எனினும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், சென்னையில் மட்டும் 24 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதைத்தொடர்ந்து, கொரோனா பாதிப்பை கட்டுபடுத்தும் வகையில் இந்த 4 மாவட்டங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொரோனாவை கட்டுபடுத்தும் வகையில் வடசென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அதே நேரத்தில், கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அப்போது தான் பாதிப்பை கட்டுபடுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஒவ்வொரு வாரமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிவிக்கை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 5ம் தேதி வரை தமிழகத்தில் மொத்தமாக எத்தனை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளது என்ற அறிவிப்பை தமிழக அரசின் தலைமை செயலாளர் அறிவித்து அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதன்பேரில் தற்போது, சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மொத்தமாக 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

.