বাংলায় পড়ুন Read in English
This Article is From Apr 24, 2020

இந்தப் படத்தில் உங்களுக்கு எத்தனைப் புலி தெரியுது..? - கண்டுபிடிக்கிறது சுலபமில்லங்க…

அதிகபட்சமாக ஒருவர் 20 புலிகள் இருப்பதாக கருத்திட்டுள்ளார்.

Advertisement
விசித்திரம் Edited by

அந்தப் படத்தை ரீ-ட்வீட் செய்த பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், தன் கண்களுக்கு 11 புலிகள் தெரிவதாக கூறினார்.

ட்விட்டர் தளத்தில் சாதாரணமாக பகிரப்பட்ட ஒரு புகைப்படம், பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. '@isharmaneer' என்னும் பெயர் கொண்ட ஒரு ட்விட்டர் பயனர், புலிக் குடும்பம் ஒன்று வனத்தில் அமர்ந்திருக்கும் ஓவியப் படத்தைப் பகிர்ந்தார். கூடவே அவர், ‘இந்த புகைப்படத்தில் உங்களால் எத்தனைப் புலிகளைப் பார்க்க முடிகிறது?' என்று கேள்வியெழுப்பியிருந்தார். 

எதேச்சையாகப் பார்த்தால் இரண்டு பெரிய புலிகளும், இரண்டு குட்டிப் புலிகளும் இருப்பது போலத்தான் தெரியும். ஆனால், உற்று நோக்கினால், பல இடங்களில் புலி முகங்கள் இருப்பதைப் பார்க்கலாம். பலரும் அந்தப் படத்திற்குக் கீழ், தங்கள் கண்களுக்கு எத்தனைப் புலிகள் தெரிகிறது என்பதை பதிலாக சொல்லி வந்துள்ளனர். 

படத்தைப் பார்க்க:

அந்தப் படத்தை ரீ-ட்வீட் செய்த பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், தன் கண்களுக்கு 11 புலிகள் தெரிவதாக கூறினார். அவ்வளவுதான் அவரின் ரசிகர்களும், இந்த புலிப் புதிரில் இணைந்து கொண்டனர். 

Advertisement

பல பாலிவுட் நடிகைகளும் இந்த விளையாட்டில் இணைந்து கொண்டு, தங்கள் கண்களுக்கு எத்தனைப் புலிகள் தெரிகிறது என்பது குறித்து பதில் சொல்லியிருக்கின்றனர். 

அதிகபட்சமாக ஒருவர் 20 புலிகள் இருப்பதாக கருத்திட்டுள்ளார். ரிப்ளைகளைப் பார்க்கவும். 
 

Advertisement
Advertisement