This Article is From Jun 14, 2018

பிரதமர் மோடியின் ஃபிட்னெஸ் சவாலுக்கு பதிலளித்த உயர் காவல் அதிகாரிகள்

உடற்பயிற்சி குறித்த பதிவுகள் நாடு முழுவதும் ட்ரெண்டு ஆகியிருந்த நிலையில். ஜம்மு காஷ்மீர் உயர் காவல் துறை அதிகாரி, எஸ்பி. வெய்த்,  ஐந்து தண்டால் எடுத்து அதை வீடியோ ட்வீட்டாக போட்டிருந்தார்

பிரதமர் மோடியின் ஃபிட்னெஸ் சவாலுக்கு பதிலளித்த உயர் காவல் அதிகாரிகள்

PM Modi's tweet went viral among the forces and all rank officers kept discussing it through the day

ஹைலைட்ஸ்

  • ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் ஃபிட்னெஸ் சேலஞ்
  • குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்கு இந்த சவால்
  • அதிகாரிகளின் ஃபிட்னெஸ் ஷேப் 1 , ஷேப் 2 என வகைப்படுத்தப்படுகிறது
New Delhi:

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தான் வெளியிட்ட ஃபிட்னெஸ் வீடியோவை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரிகள், குறிப்பாக நாற்பது வயதுக்கு மேல் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகள் இந்த சவாலை ஏற்று உடற்பயிற்சி செய்யுமாறு சேலஞ் செய்துள்ளார். “இந்தியாவில் உள்ள ஐ.பி.ஸ் அதிகாரிகள் இந்த சவாலை ஏற்க பரிந்துரைக்கிறேன். குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்” என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். எனவே, நாட்டிலுள்ள ஐபிஸ் அதிகாரிகள் மத்தியில் இது தான் டாக் ஆஃப் தி டவுன்.

“கடந்த 30 ஆண்டுகளாக நான் உடற்பயிற்சி செய்து வருகிறேன்.  அதனால், உடலளவிலும் மனதளவிலும் புத்துணர்ச்சி கிடைக்கும்” என்று மொரதாபாத்தின் ஐ.ஜி  பி.கே சிங் கூறினார். 1994 ஆம் ஆண்டு குழுவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி இவர்.

“உடலை நேசிக்க வேண்டும். அப்போது தான் உடலை ஆரோக்கியமாக பேண முடியும். உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்” எனவும் கூறினார்.

பிரதமரின் ட்வீட்டைத் தொடர்ந்து, “சார், இந்த சவாலை நான் ஏற்கிறேன். மேலும் உத்தர பிரதேசத்தில் இருக்கும் அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளையும்  இந்த சவாலை ஏற்க அழைக்கிறேன்” என்று உத்தரப் பிரதேச டி.ஜி.பி ஓ.பி சிங் ட்வீட்டியுள்ளார்.

ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் தனது  ட்விட்டர் பக்கத்தில், “காவல் துறை அதிகாரிகளாக பணியாற்ற முழு உடல் மற்றும் மன ஆரோக்கியம் வேண்டும். பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறோம். நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இதற்கான நேரத்தை ஒதுக்கி செயல்படுவார்கள்” என தெரிவித்திருந்தது.

உடற்பயிற்சி குறித்த பதிவுகள் நாடு முழுவதும் ட்ரெண்டு ஆகியிருந்த நிலையில். ஜம்மு காஷ்மீர் உயர் காவல் துறை அதிகாரி, எஸ்பி. வெய்த்,  ஐந்து தண்டால் எடுத்து அதை வீடியோ ட்வீட்டாக போட்டிருந்தார். தனது குழுவில் உள்ள 80,000 பேரை இந்த போட்டியில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார். வெய்த்தின் அந்த ட்வீட்டை பிரதமர் மோடி ரி-ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த உடற்பயிற்சி சவால் குறித்த மாறுபட்ட கருத்துக்களும் எழுந்தன. “காவல் துறையினர் என்றாலே உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம். எனவே, இதில் என்ன சிறப்பு உள்ளது?” என உயர் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் “உடல் ஆரோக்கியம் என்பது ஒரு நிமிட உடற்பயிற்சி வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்வதால் ஏற்படுவதில்லை “ என்கிறார் அவர்.

நாடு முழுவதும் 4,000 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர். துணை  இராணுவ காவல் பணியில் 15 லட்சம் ஆண்களும், பெண்களும், மாநில காவல் பணியில் 25 லட்சம் பேரும் உள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு வழங்கப்படுவதில் ஃபிட்னெஸ் மிக முக்கியமாக கருதப்படுகிறது. . ‘ஷேப் 1’ , ‘ஷேப் 2’ என்று வகைப்படுத்துகின்றனர்.

முழு உடல் ஃபிட்னெஸ் பெற்றவர்களை ‘ஷேப் 1’  பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த பிரிவில் உடல் திறன், கேட்கும் திறன், பார்க்கும் திறன் என அனைத்தும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே பணி நியமனம் கிடைக்கும்

கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்வான ஐபிஎஸ் அதிகாரி சலுங்கே தீபக் என்பவர், அடிப்படை உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால், அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.