இந்த படத்தில் நாய் எங்கு உள்ளது?
சிலவற்றை எவ்வளவு உற்று நோக்கினாலும் நமது கண்களுக்குப் புலப்படுவதில்லை. காரணம் நாம் பார்க்கும் பொருளில் போதுமான வெளிச்சமும் நிழலும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருளைச் சுற்றியுள்ளதும் சரியாக அமைய வேண்டும்.
இதற்கு உதாரணமாய் ஒரு போட்டோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மெத்தை படுக்கையில் நாய் இருக்கிறது. ஆனால், அந்த மெத்தையில் நாய் இருப்பதை கண்டுபிடிப்பதற்கு அதன் உரிமையாளருக்கே 10 நிமிடங்கள் ஆகியுள்ளது.
இந்தப் படத்தை ரெடிட் பயனாளர் ஒருவர், ரெடிட்டில் தனது வளர்ப்பு நாய் மெத்தை மேல் இருக்கும் படத்தை பதிவிட்டு, இதில் நாய் எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதில் நாய் இருப்பதை அதன் உரிமையாளரான எனக்கே 10 நிமிடங்கள் கழித்துதான் கண்டுபிடிக்க முடிந்தது என்றும் குறிப்பிட்டார்.
இது இணையத்தில் வலம் வர நெட்டிசன்கள் பலரும் இந்தப் படத்தில் நாயின் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. பலருக்கு பல மணி நேரமாக கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து இந்தப் படம் வைரலாக மாறியது. ஒவ்வொருவரும் தங்களது நண்பர்களுக்குப் பகிர்ந்து முடிந்தால் நாய் இருக்குமிடத்தை கண்டுபிடிக்குமாறு சவால் விட்டுள்ளனர்.
ஒரு சிலர் மட்டுமே படத்தில் நாய் இருப்பதை கண்டுபிடித்து, அதனை வட்டமிட்டு காண்பித்துள்ளனர். உங்களின் பார்வைக்கு அந்தப் படம்.
I was frantically looking for my dog for 10 minutes. from r/aww
இந்தப் படம் ரெடிட் தளத்தில் சுமார் 20 ஆயிரம் லைக்ஸ்களைப் பெற்றுள்ளது. 300க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். அதில் நாய் கண்ணாமூச்சி ஆடுவதாக வேடிக்கையான கருத்தை பதிவிட்டுள்ளனர்.
Click for more
trending news