বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From May 11, 2020

எவ்ளோ சீக்கிரம் இந்தப் படத்தில மறைஞ்சிருக்க பூனைய கண்டுபுடிக்க முடியுதுனு பாருங்க..?

“இந்தப் படத்தில் உள்ள புனையைக் கண்டுபிடியுங்கள். இது ஒரு மீன்பிடி பூனை"

Advertisement
விசித்திரம் Edited by

நீர் நிலைகளுக்குப் பக்கத்தில் மட்டுமே இவை வசிக்கும்

இந்திய வனத் துறை அதிகாரியான ரமேஷ் பாண்டே, இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மீன்பிடி பூனை, காட்டில் உலவும் படத்தைப் பகிர்ந்தார். ஆனால், எடுத்த எடுப்பில் பூனை எங்கே உள்ளது என்பதைப் பார்க்க முடியாது. காரணம், பூனை அப்படியே காட்டோடு ஒன்றியுள்ளதால் தெளிவாக எங்கே இருக்கிறது என்பதை உடனே கண்டுபிடிக்க இயலாது. அதைக் கண்டுபிடிக்கச் சொல்லித்தான் தனது ட்விட்டர் பின்தொடர்பவர்களுக்கு சவால் விட்டார் பாண்டே. 

“இந்தப் படத்தில் உள்ள புனையைக் கண்டுபிடியுங்கள். இது ஒரு மீன்பிடி பூனை. நீர் நிலைகளுக்குப் பக்கத்தில் மட்டுமே இவை வசிக்கும். வனத்திற்கு உள்ளே இவை தென்படுவது மிக அரிதான விஷயம்,” என்று படத்துடன் தகவலையும் பகிர்ந்துள்ளார் பாண்டே. இந்தப் படமானது இமாலய மலைத் தொடரின் தெராய் பகுதியில் எடுக்கப்பட்டது எனத் தெரிகிறது. 

நம் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளைவிட சுமார் இரு மடங்கு பெரியதாக இருக்கும் மீன்பிடி பூனை. மீன்களை உண்டு உயிர்வாழும் உயிரினம் இவை. இமாலய மலைத் தொடரின் சுந்தரவனத்தில் உள்ள அலையாத்திக் காடுகளில் இந்தப் பூனையைப் பார்க்க முடியும். கங்கை மற்றும் பிரம்மபுத்ரா நதிப் பள்ளத்தாக்குகளில் இந்தப் பூனைகள் அதிகமாக உயிர் வாழ்கின்றன. 

Advertisement

உங்களால் எவ்வளவு சீக்கிரம் மீன்பிடி பூனையைக் கண்டுபிடிக்க முடிகிறது என்று பாருங்கள்.

பல ட்விட்டர் பயனர்கள் பூனை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர்:

அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக உள்ளது மீன்பிடி பூனைகள். நீர்நிலைகளின் அழிப்பு அவைகளின் இருத்தலைக் கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்தியாவில் இந்தப் பூனைகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. 

Advertisement