New Delhi: புதுடில்லி: கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையால், கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும், பள்ளி, கல்லூரிகளும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்ளை திரும்ப வழங்கும் முயற்சியாக, ‘புக் சாலென்ஜ்’ எனப்படும் விளையாட்டு பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், புத்தகத்தை கொடையாக அளிக்க விரும்புவர்கள், மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்து புத்தகங்களை கேரளாவிற்கு அனுப்பி வைக்கலாம்.
இந்த ஆன்லைன் பிரச்சாரத்தின் மூலம் , வெளி மாநிலங்களில் இருந்து 5,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் புத்தகங்களை கேரளாவில் உள்ள பள்ளிகளில், ‘வகுப்பு நூலகம்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
மேலும், மாநிலத்தில் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு வகுப்பு புத்தகங்கள் வழங்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாக கேரள பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது