This Article is From Jul 19, 2018

நாளை மெஜாரிட்டிக்கான வாக்கெடுப்பு - பாராளுமன்றம் விளையாட இருக்கும் நம்பர் கேம்

நாளை மெஜாரிட்டிக்கான வாக்கெடுப்பு - பாராளுமன்றம் விளையாட இருக்கும் நம்பர் கேம்
New Delhi:

நாளை மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. இதில் அ.தி.மு.க வாக்களிக்காது என்று தெரிகிறது. பிஜு ஜனதா தளம் மற்றும் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் நாளை பா.ஜ.கவுக்கு பக்க பலமாக இருக்கும். 

பா.ஜ.க அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான வாக்குகள் இருந்தாலும், சில கட்சிகள் வாக்களிக்காமல் இருந்தால்,  வெற்றிக்கு தேவையான மெஜாரிட்டி எண்ணிக்கை குறையும் என்று பா.ஜ.க எண்ணுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் 312 உறுப்பினர்கள் இருக்கின்றனர். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 533. 10 இடங்கள் காலியாக இருப்பதால், பெரும்பான்மையை நிரூபிக்க 266 வாக்குகள் இருந்தால் போதுமானது. எதிர்கட்சிகளிடம் மொத்தமாக 172 வாக்குகள் இருக்கின்றன. 

அ.தி.மு.க, நவின் பட்நாயக்கின் பி.ஜே.டி மற்றும் டி.ஆர்.எஸ் கட்சிகள் சேர்ந்து 68 வாக்குகள் இருக்கின்றன. இப்போது பி.ஜே.டியும் அ.தி.மு.கவுடன் இணைந்து வாக்களிக்காமல் இருந்தால், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்கு அளவு 234 ஆக குறையும். 

ஒருவேளை பி.ஜே.டி பா.ஜ.கவுக்கு எதிராக வாக்களித்து, அ.தி.மு.கவும், டி.ஆர்.எஸ் கட்சிகள் வாக்களிக்காமல் இருந்தால், மெஜாரிட்டிக்கு 244 வாக்குகள் இருந்தால் போதும்.

.