தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையான தேவை. இந்நிலையில் மூன்றாம் உலகப் போர் தண்ணீரால் தான் ஏற்படும் என்ற நிலைக்கு உலகம் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆங்காங்கே இப்போது பருவ மழைத் தொடங்கியுள்ளது. அதை நாம் மகிழ்ச்சியுடன் வேடிக்கைப் பார்ப்பதோடு வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டிருகிறோம். ஆனால் வீணாகும் மழை நீரை சேமிப்பதை பற்றி நம்மில் எத்தனை பேர் சிந்தித்திருப்போம்?
தமிழ்நாடு, இராஜஸ்தான், டில்லி, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஓராண்டில் 3 அல்லது 4 மாதங்கள் மட்டுமே மழை பெய்கிறது. இக்குறுகிய கால அளவில் பெய்யும் மழை நீரை முறையாக சேமித்து வைத்தால் மட்டுமே அதனை ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும். இல்லையென்றால் வறட்சி மற்றும் நீர்த்தட்டுப்பாட்டினால் மக்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
மழை நீர் சேமிப்பு இருவகைப்படும். முதலாவதாக நிலத்திற்கு அடியில் சேமித்தல். நம் வீட்டு ஆழ் துளைக் குழாயிலிருந்து மூன்றடி தூரத்தில் சுமார் மூன்றடி விட்டமுள்ள, நான்கடி ஆழமுள்ள ஒரு குழி தோண்ட வேண்டும். அதில் கூழாங்கற்களையும், ஆற்று மணலையும் அடுக்குகளாக இட்டு, அந்த குழிக்குள் வீட்டு மாடியிலோ அல்லது கூரையில் இருந்து வரும் மழை நீரை குழாயை மூலம் இந்த குழிக்குள் விட வேண்டும் இதன் மூலம், அவ்வப்போது மழை பெய்யும் போது சேகரிக்கும் நீர் பூமிக்குள் சென்று, நிலத்தடி நீரை வற்றாமல் இருக்க உதவுகிறது.
இரண்டாவது முறை, கொள் கலன்களில் சேமித்தல். நில மட்டத்திற்கு. இந்த முறை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உகந்தது. நிலத்திற்கு அடியில் பொதுவான பெரிய தொட்டி அமைத்து ஒரு வீதியில் உள்ள அல்லது ஒரு அப்பார்ட்மன்டில் இருக்கும் அனைத்து வீட்டுக் கூரைகளிலிருந்தும் குழாய்கள் மூலம் மழை நீரை ஒருமுகப்படுத்தி வடிகட்டிச் சேகரிக்கலாம்.
ஏற்கனவே உள்ள கிணறுகளின் அருகில் வடிகட்டும் அடுக்கு அமைத்து மழை நீரை வடித்து கிணறுகளில் விட்டு சேமிக்கலாம்.
இந்த செயல்முறைகள் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படலாம். சராசரியாக, ஒரு 1000 சதுர அடி மாடியில் இருந்து கிடைக்கும் மழை நீரை 60 அடி ஆழம் கொண்ட ஒரு போர் வெல்லுக்கு அனுப்ப வேண்டும். 1000 - 1200 சதுர அடி உள்ள ஒரு வீட்டுக்கு ரூ .5000 - ரூ 8000 செலவாகும் (குழாய்கள் மற்றும் மழை நீர் வடிகட்டியை பொருத்து).
போர் வெல் இல்லையென்றால் , உங்கள் இடத்திலுள்ள மண் வகையைப் பொறுத்து குறைந்தபட்சம் 10 அடி முதல் 20 அடி வரை குழி தோண்டுவதன் மூலம் நீர் மண்ணிற்கு அனுப்பப்படும்.
ஓடுகின்ற நீரை சேமிப்பதற்கு , நுழைவாயிலின் முன் ஒரு சம்ப் கட்டப்பட வேண்டும், கிடைக்கக்கூடிய இடத்தின் அடிப்படையில் இந்த முறையை பயன்படுத்தலாம். இதற்கு ரூ .5000 முதல் ரூ 12,000 வரை செலவாகும். சம்ப் மேலே இருக்கும் டங்க்குடன் இணைக்கப்பட வேண்டும் இந்த சம்ப் இணைக்கப்பட வேண்டும்.
தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கும் நிலைக்கு வந்துவிட்டோம். இனியாவது நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து மழை நீரை சேமிப்போம்.Click for more
trending news