ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனில், லொகேஷன் செட்டிங்கை ஆஃப் செய்து வைத்தால், கூகுளால் நீங்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முடியாது என நினைக்கிறீர்களா? இல்லை என்கிறது அசோசியேட்டட் பிரெஸ் அமைப்பின் ஆய்வு. ஜி.பி.எஸ் மற்றும் லொகேஷன் செட்டிங்கை ஆஃப் செய்தாலும், கூகுளால் உங்கள் தகவலை எடுக்க முடியும் என்கிறது அந்த ஆய்வு. இடம் குறித்த தகவலைப் பெறுகிறோம், என்று அறிவிக்காத சில அம்சங்கள் மூலம் கூகுள் தகவலை எடுப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள கூகுள் நிறுவனம், இடம் குறித்து தகவலை தெரிவிக்க பயன்பாட்டாளர் மறுப்பதற்கான வசதி சரியாகவே உள்ளது என்றது. பயன்பாட்டாளர் விரும்பும் போது அந்த செட்டிங்கை மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூகுள் தரப்பு கூறுகிறது.
கூகுள் உங்களிடம் இருந்து தகவலை எப்படி எடுக்கிறது, என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது பற்றி அந்த ஆய்வில் தெரியவந்ததை இங்கே கூறுகிறோம். ஆனால், அதை புரிந்து கொள்ள உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் செட்டிங் மற்றும் கூகுள் கணக்கு பற்றியும் முதலில் நீங்கள் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
மொபைல்:
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் லொகேஷன் சர்விஸ்களை ஆஃப் செய்தால், எந்த தகவலையும் நீங்கள் தர தயாராக இல்லை என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இடம் குறித்த தகவலை கேட்கும் எந்த ஒரு சேவையாக இருந்தாலும், இந்த செட்டிங்கை ஆஃப் செய்வதன் மூலம் அனுமதியை நீங்கள் மறுப்பீர்கள் என்று அர்த்தம். தேவையான போது இந்த செட்டிங்கை ஆன் செய்து கொள்ளலாம். பிரைவஸி ----> லொகேஷன் சர்விசஸ் சென்று செட்டிங்கை மாற்றிக் கொள்ளலாம்.
கூகுள் கணக்கு:
லொகேஷன் செட்டிங்கை ஆஃப் செய்யாமல், உங்கள் தகவலை கூகுள் எடுப்பதை நிறுத்த நினைத்தால், உங்களுக்கான இரண்டாவது வாய்ப்பு லொகேஷன் ஹிஸ்ட்ரி.
மேலே உள்ள இரண்டு முறைகளில், உங்கள் லொகேஷனை ஆஃப் செய்யலாம் என்கிறது கூகுள். ஆனால், இன்னும் சில வழிகளில் கூகுள் உங்கள் தகவலை எடுக்கிறது என்றும், அதை எப்படி கண்டுபிடிப்பது என்றும் கூறுகிறது ஆய்வு.
கூகுள் அக்கவுன்டில், Personal Info and Privacy---> My Activity சென்று பார்த்தால் நீங்கள் எங்கெல்லாம் சென்று வந்தீர்கள் என்ற தகவல் பட்டியலிடப்படும். அங்கு இருக்கும் லொகேஷன் ஹிஸ்ட்ரி செட்டிங்கை பயன்படுத்தி, மாற்ற முடியும். இதன் மூலம் உங்கள் தகவலை உங்கள் அனுமதி இன்றி முற்றிலும் தடுக்க முடியும்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)