This Article is From May 14, 2019

புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளின் அழகான போட்டோஷூட்

தன்னுடைய ஓக்லஹோமா ஸ்டூடியோவில் புற்று நோயிலிருந்து மீண்ட குழந்தைகளை வைத்து இலவசமாக போட்டோ ஷூட் ஒன்று எடுத்துள்ளார்.

புற்றுநோயிலிருந்து மீண்ட குழந்தைகளின் அழகான போட்டோஷூட்

இந்த புகைப்படங்களின் குழந்தைகளின் போராட்ட வலிமையை அழகாக எடுத்துக் கூறுகிறது.

லாரா ஸ்கேண்டிலிங்க் என்ற தொழில்முறை புகைப்பட கலைஞர்  புற்றுநோயிலிருந்து  மீண்ட குழந்தைகளின் மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படம் எடுத்துள்ளார். லாரா பொதுவாக குழந்தை பிறப்பு, பட்டமளிப்பு, மற்றும் திருமணங்கள் ஆகிய நிகழ்வுகளை மட்டுமே புகைப்படமாக எடுத்துள்ளார். 

தன்னுடைய அப்பாவும் நெருங்கிய நண்பரின் 1 வயதுக் குழந்தையும் புற்றுநோயால் இறந்துள்ளனர். அவர்கள் உதவியாக இருக்க முயன்றுள்ளார் லாரா. ஆனால், அப்போதைய சூழலில் அது முடியவில்லை. தற்போது தன்னுடைய புகைப்படத் திறமையை புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பயன்படுத்தியுள்ளார். தன்னுடைய ஓக்லஹோமா ஸ்டூடியோவில் புற்று நோயிலிருந்து மீண்ட குழந்தைகளை வைத்து இலவசமாக போட்டோ ஷூட் ஒன்று எடுத்துள்ளார்.

குழந்தைகள் தங்களை அழகாக உணரும் வகையில் அழகிய ஆடைகளை அணிவித்து அவர்களின் புன்னகை ததும்பும் முகங்களை தன் லென்ஸில் பதிய வைத்துள்ளார். 

pt023je

“நான் உணர்வு ரீதியாக ஒன்றை செய்ய விரும்பினேன்” என்கிறார் லாரா.

ஓக்லஹோமா நகரத்திலிருந்து 3 குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் இந்த போட்டோஷூட்டில் கலந்து கொண்டனர். ரீகன் ஃபிராங்க்ளின் (6) அரிதான மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவன். ஐன்ஸ்லி பீட்டர்ஸ் லுகேமியாவுக்கு (4) சிகிச்சை பெற்று  வந்தவன். ரிலி ஹுயூஹே (3) சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இந்த குழந்தைகள் பல ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். கீதெரபி சிகிச்சையினால் தன் தலை முடிகளை இழந்தவர்கள். 

194r99

இவர்கள் யாரும் முன்பின் சந்தித்ததே இல்லை எனலாம். இந்த போட்டோ ஷூட்டிற்காகவே  வந்துள்ளனர். சிறிது நேரத்திலேயே குழந்தைகள் அனைவரும் பேசி சிரித்து விளையாட தொடங்கி விட்டனர். அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களும் புகைப்படத்தில் அழகாக இடம்பெற்றுள்ளது என்று கூறுகிறார் புகைப்படக் கலைஞர் லாரா. புற்றுநோய்க்கு எதிராக போராடும் சிறு போராளிகளை அழகாகவும் மகிழ்ச்சியாகவும் பார்ப்பது பலருக்கும் உத்வேகத்தை கொடுக்கும் என்கிறார் லாரா.

.