நாய் ஒன்று மளிகை பொருட்கள் வாங்கி வரும் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்துள்ளார்.
ஹைலைட்ஸ்
- மளிகை பொருட்கள் வாங்கி நாய் - ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்த வீடியோ
- கொரோனவுக்கு பிறகு உலகம் எப்படி மாறும்?
- பொம்மை காரில் ஏறி, மார்க்கெட்டுக்கு சென்று வரும் நாய்
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய நெருக்கடியால் ஏற்கனவே உலக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பயணம் செய்யும் முறையையும், வாழ்த்து சொல்லிக்கொள்ளும் முறையையும் மாற்றுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வரும் நிலையில், இது நிரந்தரமாக உலகை எப்படி மாற்றும் எனச் சிலர் வியப்பில் உள்ளனர்.
அந்தவகையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டரில் தனக்கு 7 மில்லியன் ஃபாலோவர்ஸ் கொண்டுள்ளவர்.. கொரோனா காரணமாக வாழ்க்கையை எப்படி நிரந்தரமாக 'மீட்டமைக்க முடியும்' என நேற்று ட்வீட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நெருக்கடிகள் காணாமல் போகும்.. ஆனால், இந்த நெருக்கடிகள் எப்படி உலகை மீண்டும் மீட்டமைக்க வைக்கிறது என்பது குறித்து மஹிந்திரா தனது ட்வீட்டரில் கூறியதாவது, இந்த உலகம் சில வழிகளில் மாறுவதற்காக கொரோனாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வீட்டிலிருந்தே பணி செய்யப் பல நிறுவனங்கள் ஒப்புதல் தெரிவிக்கின்றன. பயணங்கள் வெகுவாக குறைந்துள்ளன, வீடியோ காலில் மீட்டிங் நடைபெறுகிறது. இப்படி பல்வேறு வழிகளில் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.
அவரைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸ் உலகைப் பாதித்த சிலவற்றைத் தவிர்த்து. மாற்றி அமைத்த "வேறு எதாவது?" உள்ளதா? என மஹிந்திரா கேள்வி எழுப்பினார். இதற்கு நூற்றுக்கணக்கான பதில்கள் அவருக்குக் குவிந்துள்ளன.
இதுதொடர்பாக மஹிந்திரா ஒரு டிக் டாக் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், அதன் உரிமையாளருக்காக நாய் ஒன்று மளிகை பொருட்கள் வாங்கி வருகிறது. சிஎன்என் அளித்துள்ள தகவலின் படி, பூனைகள் மற்றும் நாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என வல்லுநர்கள் தெரிவித்ததாகத் தெரிகிறது.
அந்த வீடியோவில், முகமூடி அணிந்த நாய் ஒன்று பொம்மை காரில் ஏறி, மார்க்கெட்டுக்கு சென்று தனது உரிமையாளருக்காகப் பொருட்களை வாங்கி வருகிறது. முகமூடி அணிந்த கடைக்காரரும், நாயின் முதுகில் உள்ள பையில் சில காய்களை வைத்து அனுப்புகிறார். பின்னர் மீண்டும் அந்த நாய் அந்த பொம்மை காரில் ஏறிப் பயணிக்கிறது.
மஹிந்திரா பகிர்ந்த இந்த வீடியோ இதுவரை 28,000 பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதற்குப் பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.