This Article is From Jun 22, 2018

ஆசிரியர் பகவானுக்கு புகழாரம் சூட்டிய ஏ.ஆர்.ரகுமான், ஹிரித்திக் ரோஷன்!

நேற்று முதல் பகவான் என்ற இந்த ‘நல்லாசிரியரைப்’ பற்றிதான் எல்லா சமூக வலைதளங்களிலும் பதியப்பட்டு வருகின்றன.   


Advertisement
Tamil Nadu Posted by (with inputs from Others)
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியகரம் பகுதியில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருப்பவர் பகவான். இவர், 6 முல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள அப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடம் எடுத்து வருகிறார். இவர், ஆசிரியர் - மாணவர் இடையிலான இடைவெளியைக் குறைத்ததால், மாணவர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றவராகவும் மனதுக்கு நெருக்கமானவராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது பள்ளியில் தேவைக்கு அதிகமாக ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறி திருத்தணியில் இருக்கும் வேறொரு அரசுப் பள்ளிக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார் பகவான். இதையறிந்த மாணவர்கள், பகவானை எங்கும் போகக் கூடாது என்று சொல்லி கட்டித் தழுவி கதறியுள்ளனர். பல மாணவர்கள் பகவானை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு அழும் காட்சிகள் செய்தித் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. இதையடுத்து, கல்வித் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பகவானின் பணி மாறுதல் உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். 
 

ஒரு ஆசிரியருக்காக மாணவர்கள் இந்தளவுக்கு இறங்கி போராடியது பலரது மனதை உருகவைத்தது. இதில் சில திரைப்பிரபல நட்சத்திரங்களும் அடங்குவர். பகவான் குறித்தான ஆங்கில ஊடக நிறுவனத்தில் பதிந்திருந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பாலிவுட் நடிகர் ஹிரித்திக், ‘ஆசிரியருக்கும் மாணவருக்கும் மத்தியில் இதைப் போன்ற ஒரு உறவு இருப்பது என் மனதை உருகவைக்கிறது’ என்று நெகிழ்ந்துள்ளார்.

உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பகவான் குறித்தான செய்தியை பகிர்ந்து ‘குரு - சிஷ்யர்கள்’ என்று ட்வீட்டியுள்ளார்.

Advertisement
நேற்று முதல் பகவான் என்ற இந்த ‘நல்லாசிரியரைப்’ பற்றிதான் எல்லா சமூக வலைதளங்களிலும் பதியப்பட்டு வருகின்றன.  
Advertisement