விவசாயி ஒருவரின் நிலத்தில் பாம்பு சிக்கியது.
அரியவகை இரட்டைத் தலை நாகப்பாம்பு ஒன்று வீடியோவில் சிக்கியுள்ளது. சீறும் பாம்பின் வீடியோ காட்சி வலைதளங்களில் அதிக பார்வைகளை குவித்து வருகிறது.
சீனாவின் ஹிபே மாகாணத்தை சேர்ந்த சென்சோ என்ற விவசாயிக்கு சொந்தமாக நிலம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த திங்களன்று இரட்டைத் தலை நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்த அவர், வீடியோ எடுத்ததுடன் மக்களின் பார்வைக்காக பாம்பை பிடித்து பானைக்குள் அடைத்து வைத்திருந்தார்.
அவர் எடுத்த காட்சிகள் வைரலான நிலையில், பாம்பு இருந்த பானையை சென்சோவின் குழந்தை ஒன்று உடைத்து விட்டது. இதையடுத்து பானையில் இருந்த இரட்டைத் தலை பாம்பு தப்பிச் சென்று விட்டது.
இந்த வகைப் பாம்புகளால் மிக வேகமாக ஊர்ந்து செல்ல முடியாதாம். இதனால் இவை எளிதாக மற்ற உயிரினங்களுக்கு இரையாகி விடுவதாக உயிரின வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்சோ பகிர்ந்த வீடியோ காட்சி பல லட்சக்கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது.
Click for more
trending news