Read in English
This Article is From Aug 01, 2018

வீட்டினுள் வெடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்; விபத்தில் இருந்து தப்பிய குடும்பம் - வைரல் வீடியோ

வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்படிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று திடீரென வெடித்ததில், பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது

Advertisement
விசித்திரம்

சீனாவில், வீட்டிற்குள் நிறுத்தி வைக்கப்படிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று திடீரென வெடித்ததில், பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷடவசமாக வீட்டினுள் இருந்த நபர், அவரது மகள், செல்லப்பிராணி ஆகியோர் உயிர் பிழைத்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி அளவில், சார்ஜ் இணைப்பில் இருந்த ஸ்கூட்டரில் இருந்து சத்தம் வருகிறது. சத்தத்தை கேட்ட வீட்டினுள் இருந்தவர், ஸ்கூட்டரில் இருந்து புகை வருவதை கண்டதும், தன் மகள், செல்லப்பிராணியுடன் வீட்டை விட்டு அவசரமாக வெளியேறியுள்ளார். அடுத்த சில நொடிகளிலேயே, ஸ்கூட்டர் வெடித்து சிதறியுள்ளது. கண் இமைக்கும் நொடியில், வீட்டில் இருந்த அனைவரும் உயிர் தப்பி உள்ளனர்.

 
 

வீட்டில் இருந்த சிசிடிவியில் ஸ்கூட்டர் வெடித்த காட்சிகள் பதிவாகியுள்ளன. சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை 11 மணி நேரத்தில் 60,000 பேர் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement