This Article is From Jun 19, 2019

மிருகத்தை சாப்பிடும் சிலந்தி..!- இணைய வைரலான சம்பவம்

பலரும் இந்த அதிசய நிகழ்வின் படத்தைத் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்

மிருகத்தை சாப்பிடும் சிலந்தி..!- இணைய வைரலான சம்பவம்

ஜஸ்டின் லாட்டன் மற்றும் அவரது கணவர், மவுன்ட் ஃபீல்டு தேசியப் பூங்காவில் தங்கியிருந்தபோது இந்த ‘மிருகத்தை சிலந்தி உண்ணும்’ சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. 

ஆஸ்திரேலியாவில் பாஸம் (possum) என்கிற விலங்கை, ஹன்ட்ஸ்மேன் என்னும் சிலந்தி சாப்பிடும் போட்டோ ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியாவுக்கு ஒரு இளம் ஜோடி, சுற்றுலா சென்றுள்ளது. அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக ‘தி சன்' செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. 

ஜஸ்டின் லாட்டன் மற்றும் அவரது கணவர், மவுன்ட் ஃபீல்டு தேசியப் பூங்காவில் தங்கியிருந்தபோது இந்த ‘மிருகத்தை சிலந்தி உண்ணும்' சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. 

இந்த திகில் நிறைந்த சம்பவத்தைப் படம் எடுத்த ஜஸ்டின், அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது பதிவுடன் ஜஸ்டின், “போஸமை சிலந்தி உண்கிறது. இந்தப் படத்தை எனது கணவர் மவுன்ட் ஃபீல்டு லாட்ஜில் எடுத்தார்” என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் இருக்கும் பிக்மி பாஸம் என்கிற மிருகமானது, 2.5 இன்ச் வரை வளரும் என்று சொல்லப்படுகிறது. ஹன்ட்ஸ்மேன் சிலந்தியும் அதே அளவுக்கு வளரும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் ஹன்ட்ஸ்மேனுக்கு 13 கால்கள் இருக்கும். அவை 13 இன்ச் வரை வளருமாம். 

பலரும் இந்த அதிசய நிகழ்வின் படத்தைத் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். பலர், “இதைப் போன்ற ஒரு சம்பவத்தை பார்த்ததே இல்லை” என்றும், “இதுதான் நான் பார்த்ததிலேயே மிகப் பெரிய சிலந்தியாக இருக்கும்” எனவும் கமென்ட்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர். 

Click for more trending news


.