Read in English
This Article is From Nov 23, 2018

கடலில் தோன்றிய திடீர் நீரூற்று

இத்தாலியின் சாலேர்னோ (salerno) பகுதியில் உள்ள கடலில் ஏற்பட்ட திடீர் நீரூற்றால் அங்கு சிறிது நேரம் பரபரப்பானது

Advertisement
விசித்திரம்

திடிரென ஏற்பட்ட இந்த நீரூற்றால் அங்கிருந்த சில கப்பல்களின் கண்டேனர்கள் பாதித்க்பட்டன

இத்தாலியின் சாலேர்னோ (salerno) பகுதியில் உள்ள கடலில் ஏற்பட்ட திடீர் நீரூற்றால் அங்கு சிறிது நேரம் பரபரப்பானது. இந்த அரிய சம்பவத்தை அந்நாட்டு மக்கள் பிரம்மிப்போடு பார்த்ததுடன் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்த திடீர் கடல் நீரூற்றுகளுக்கும் வழக்கமாக உள்ள சூறாவளிக்கும் சிறியளவு வித்தியாசமே உள்ளது. கடலில் உருவாகும் நீருற்றுக்கள் குளிர்ந்த நீராக இருக்கும், பின்னர் சுழற்சி ஏற்படும் பொழுது தண்ணீர் இதமான சூட்டுக்கு வருவதால் அவை சீர்குலைந்து கரையை தாக்கும் முன்னரே பலவீனமாகி விடுகின்றன. இதனால் இந்த இயற்கை சக்தியால் பெரியளவுக்கு பாதிப்பு இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கரைக்கு மிக அருகே இந்த நீருற்று ஏற்பட்டதால் நேரில் கண்ட பலரும் அதை புகைப்படமாகவோ அல்லது வீடியோகளாகவோ ஆவணப்படுத்தினர்.

‘ என் வாழ்நாளில் இது போன்ற ஒன்றை நான் கண்டதில்லை, இதுபோன்ற அதிசயங்களை செய்ய இயற்கையால் மட்டும்தான் முடியும். இயற்கையால் மட்டுமே தான் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்த முடியும், ஆனால் சிறிது நேரத்திலேயே எனக்கு பயமாகிவிட்டது' என அங்கு வசிக்கும் அன்டோனியோ ஸ்டான்சியோனி தெரிவித்தார்.

 

இந்த சம்பவத்தால் துறைமுகம் அருகே இருந்த கப்பல்களில் கட்டப்பட்டிருந்த கயிறுகளும் சில கன்டேனர்களுக்கும் பாதிக்கப்பட்ட நிலையில் உயிர் சேதம் எதுவுமில்லை என்று தகவல் வெளியானது. கடந்த ஆண்டு இதேபோல் எற்ப்பட்ட நீருற்று திடீரென புயலாக மாறி கடலோர மக்களைப் பாதித்தது சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement