சென்னை விமான நிலையத்தில் முதன்முறையாக, பயணிகளை வரவேற்பதற்காக ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் முயற்சியாக இரண்டு ரோபோக்கள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளை வரவேற்பது, அவர்களின் கேள்விக்கு பதில் சொல்வது உள்ளிட்ட வேலைகளை இந்த ரோபோக்கள் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலையத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை விமான நிலையத்தில் இருக்கும் உள்நாட்டு முனையத்தில் இரண்டு ரோபோக்களை முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளோம். ஒரு ரோபோ வருகை பிரிவிலும் இன்னொன்று புறப்பாடு பிரிவிலும் இருக்கும். மக்களின் மொழி வழக்குக்கு ஏற்றாற் போல இந்த ரோபோக்கள் ரிப்ளை செய்யும். இந்த ரோபோக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு தன்னிச்சையாக சென்று பயணிகளுக்கு உதவும் திறன் கொண்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)