This Article is From Jul 25, 2018

"மனிதர்களை போல பசுகளின் உயிரும் முக்கியமானது" - யோகி ஆதித்யநாத் பேச்சு

உத்திரபிரதேச் மாநிலத்தை சேர்ந்த நான்கு நபர்கள் பசுவதை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்

Lucknow:

லக்னோ: உத்திரபிரதேச் மாநிலத்தை சேர்ந்த நான்கு நபர்கள் பசுவதை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத், மனிதர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு மாடுகளையும் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த யோகி ஆதித்யநாத், உத்திர பிரதேச மாநிலத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும், 1984 ஆம் ஆண்டு வன்முறையை நினைவுப்படுத்தி காங்கிரஸை சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2015 ஆம் ஆண்டு, உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 52வயது மொகமத் அக்லக் கும்பல் தாக்குதலால் கொலை செய்யப்பட்டார். இதுவரையில்,  11 கும்பல் தாக்குதல்கள் உத்திர பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக இந்தியா ஸ்பெண்ட் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது

நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கும்பல் தாக்குதல்கள் நடைப்பெற்று வருகின்றன. குற்றச் செயல்களை தடுப்பதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது
 

.