Read in English
This Article is From Jun 21, 2018

மதத்தை காரணம் காட்டி தம்பதிக்கு பாஸ்போர்ட் மறுப்பு

மதத்திற்கும் பாஸ்போர்ட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என பாஸ்போர்ட் நிலைய அதிகாரிகள் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்

Advertisement
இந்தியா ,

Highlights

  • மதம் மாறி திருமணம் செய்ததால் அதிகாரி தரக்குறைவாக நடந்து கொண்டார்
  • தம்பதியினர் இந்த விவகாரத்தை ட்விட்டரில் பதிவு செய்தார்
  • அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்ப்பட்டு, பாஸ்போர்ட் வழங்கப்பட்டது
Lucknow: நொய்டாவைச் சேர்ந்த தம்பதியினர், உள்ளுர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் மத ரீதியாக அவமானப்படுத்தப்பட்டதாக ட்விட்டரில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் புகார் தெரிவித்தனர். மதம் மாறி திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதியினர், பாஸ்போர்ட்டை புதிப்பிக்க லக்னோ பாஸ்போர்ட் அலுவலகம் சென்றிருக்கின்றனர். அங்கு நடந்ததாக தன்வி சேத் என்கிற அந்த பெண் ட்விட்டரில் தனக்கு நடந்த அவமறியாதை குறித்து பதிவி செய்திருந்தார்.

பழைய பாஸ்போர்ட் ஒன்றை புதுப்பிப்பதற்கும், புதிதாக பாஸ்போர்ட் ஒன்று பெறுவதற்கும், கடந்த புதன்கிழமை நேர்காணலுக்கு சென்றிருந்த போது தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக தம்பதிகள் புகார் தெரிவித்தனர். “நான் ஒரு முஸ்லிமை திருமணம் செய்து கொண்டு, என்னுடைய பெயரையும் மாற்றாததால் பாஸ்போர்ட் பெற முடியாது என அந்த அதிகாரி கூறினார். பாஸ்போர்ட் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டதற்கு, நான் அனைத்து ஆவணங்களிலும் என்னுடைய பெயரை மாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்” எனகிறார் திருமதி சேத். மேலும், “அந்த அதிகாரி எங்களிடம் அவமானப்படுத்தும் விதத்தில் பேசினார். அவர் உறக்க பேசியதில் பலரும் எங்களை பார்த்ததால் எனக்கு அழுகையே வந்துவிட்டது” என்றார் சேத் அவர் மேலும் இதை ஒரு ”வரம்பு மீறல்” எனக் குறிப்பிட்டு, அந்த அதிகாரி இருவருடைய பாஸ்போர்ட்டையும் நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறினார்.
   
சேத் அவர்களுடைய கணவர் அனாஸ் சித்திக், “அந்த அதிகாரி தன்னுடைய பெயரையும், மதத்தையும் மாற்றச் சொன்னார்... மேலும் எங்களில் யாராவது ஒருவர் பெயர் அல்லது மதத்தை மாற்ற வேண்டும் என அதிகாரி கூறினார்” எனத் தெரிவித்தார்.

இந்த ட்வீட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டேக் செய்திருந்ததால், உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டது.“மதத்திற்கும் பாஸ்போர்ட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என பாஸ்போர்ட் நிலைய அதிகாரிகள் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில் “நாங்கள் ஒரு மணி நேரத்தில் விசாரணையை முடித்து விட்டோம். அந்த அதிகாரியை பணியிட மாற்றம் செய்துவிட்டோம்” என்றனர்.

Advertisement
2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தன்வி சேத் மற்றும் அனாஸ் சித்திக் இருவருக்கும் 7 வயது மகள் இருக்கிறார், இருவரும் நொய்டாவைச் சார்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
 
Advertisement