বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 23, 2019

பேச்சுவார்த்தைக்கு ஹூரியத் தயார் : ஜம்மு & காஷ்மீர் ஆளுநர்

பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒருபோதும் கைகோர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டை இந்தியா பலமுறை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில் அறிவித்தார்
  • ஹூர்யத் தலைவர் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தகோரினார்
  • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமிக்கப்பட்டார்.
New Delhi/Srinagar:


ஜம்மு -காஷ்மீரின் நிலைமை இப்போது மிகவும் மேம்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்கு ஹூரியத் தயாராக உள்ளது என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் கூறியுள்ளார். ”பதட்ட நிலை குறைவாக உள்ளது” என்று ஆளுநர் நேற்று ஸ்ரீநகரில் ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜிதேந்திர சிங் முன்னிலையில் அறிவித்தார்.

“நான் இங்கு வந்ததை விட விஷயங்கள் மிகச் சிறப்பாக உள்ளது. ராம் விலாஸ் பாஸ்வான் வாசலில் நிற்கும்போது அவர்கள் கதவைத் திறக்கவில்லை இப்போது அவர்கள் பேசத் தயாராக உள்ளனர்.” என்று மாலிக் கூறியுள்ளார். மேலும் “எனவே வித்தியாசம் தெளிவாக உள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்படும் சிக்கல்களும் நடைமுறையில் நின்று விட்டன. மக்களை மீண்டும் அழைத்து வர நான் முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒருபோதும் கைகோர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டை இந்தியா பலமுறை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. கடந்த மாதம் தேர்தல் தொடர்பாக அரசாங்கத்திடம் ஒரு நேர்மறையான சமிக்ஞை கிடைத்துள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் தேதிகள் அறிவிக்கப்படும் என்று ஆணையம் சுட்டிக் காட்டியது. 

Advertisement
Advertisement