ஹைலைட்ஸ்
- இரட்டையர் சிறுமிகளுக்கு 12 வயது தான் ஆகிறது
- சிறுமிகளின் மாமா மல்லிகார்ஜுனா கைது செய்யப்பட்டுள்ளார்
- மேலும் இருவரை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது
Hyderabad: ஐதரபாத்தின் சைதான்யாபுரி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட இரட்டையர் சிறுமிகள், தங்கள் சொந்த மாமாவாலேயே கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைதன்யாபுரியில் வசித்து வந்தனர் மனநலம் பாதிக்கப்பட்ட இரட்டையர் சிறுமிகளான சுருஜனா ரெட்டி மற்றும் விஷ்ணுவர்தன் ரெட்டி. 12 வயதாகும் இவர்கள் சிறு வயது முதலே மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால் அவரின் தாயார் தான் அவர்களை கவனித்து வந்துள்ளார். இந்த தாயின் அண்ணன் மல்லிகர்ஜுனா ரெட்டி, தங்கை படும் கஷ்டங்களை பொறுக்க முடியாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, தங்கையின் இரு மனநலம் பாதிக்கப்பட்ட மகள்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளார். இதன்படியே இருவரையும் நண்பர்களின் உதவியோடு செய்து முடித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையில், 'சிறுமிகள் இருவரும் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. சிறுமிகளின் மாமா மல்லிகார்ஜுனா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மல்லிகாரஜுனா, நண்பர்களான வெங்கட்ரமி ரெட்டி மற்றும் விவேக் ரெட்டி ஆகியோர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது' தகவல் கூறியுள்ளனர்.
சுருஜனா மற்றும் விஷ்ணுவர்தன் ஆகியோர் வாடகைக்கு இருந்த வீட்டின் சொந்தக்காரர், சிறுமிகளை கொலை செய்த பின்னர் உடலை மல்லிகார்ஜுனா நண்பர்களின் உதவியோடு கார் ஒன்றில் ஏற்றும் போது பார்த்துள்ளார். இதையடுத்து, அவர் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு தான் இந்த விஷயம் குறித்து வெளியே தெரிந்தது.