This Article is From Oct 08, 2018

ஹைதராபாத் தேர்வு மையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

தேர்வு தொடங்கியதும் சகோதரியிடம் குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். அப்போது அழ ஆரம்பித்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது

ஹைதராபாத் தேர்வு மையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

இடைவிடாது அழுது கொண்டிருந்த குழந்தைழயை 4 காவலர்கள் சேர்ந்து சமாதான படுத்த தொடங்கினர்.

Hyderabad:

குரூப் 4 தேர்வு எழுத தனது குழந்தை மற்றும் சகோதரியுடன் வந்திருந்த பெண்ணின் குழந்தை, தனது தாய் தேர்வு எழுத சென்றதும் விடாமல் அழுது கொண்டே இருந்தது. இதைக் கண்ட அங்கிருந்த கான்ஸ்டபிள் குழந்தையை சமாதானப்படுத்த தொடங்கினார்.

இதுபோன்ற சம்பவம் இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக நடந்துள்ளது.கடந்த ஞாயிறன்று ஹைதராபாத்தில் உள்ள பார்சி பள்ளிக்கு குரூப் - 4 தேர்வு எழுத தனது 6 மாத குழந்தையுடன் ஒரு பெண் வந்துள்ளார். தேர்வு தொடங்கியதும் சகோதரியிடம் குழந்தையை விட்டுச் சென்றுள்ளார். அப்போது அழ ஆரம்பித்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.
 

epntst7

அந்த நேரத்தில் தேர்வு மைய கண்காணிப்பிற்கு வந்த கான்ஸ்டபிள் 4 பேர் குழந்தையை வாங்கி சமாதானப்படுத்த ஆரம்பித்தனர். ஒரு கான்ஸ்டபிள் குழந்தையை கையில் வைத்துக்கொள்ள மற்றொரு கான்ஸ்டபிள் குழந்தைக்கு பாட்டிலில் பாலை கொடுத்து சமாதானப்படுத்தினர்.

இந்த நெகிழ்வான சம்பவம் அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
 

.