திருமணம் ஆகி 5 மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஒருவர் மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ளார்.
Hyderabad: மனைவியின் பற்கள் கோணலாக இருப்பதாக கூறி முத்தலாக் கூறிய நபர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. திருமணம் ஆகி 5 மாதங்கள் கூட ஆகாத நிலையில் ஒருவர் மனைவிக்கு முத்தலாக் கொடுத்துள்ளார்.
முஸ்லிம் பெண்ணான ருஷானா பேகம் தனது கணவர் முஸ்தபா மற்றும் மாமியாரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக காவல்துறையில் வழக்கு தொடுத்துள்ளார். இவர்களின் திருமணம் ஜூன் 27,2019 அன்று நடைபெற்றுள்ளது.
அக்டோபர் 31-ம் தேதி முஸ்தபா மீது இந்திய தண்டனைச் சட்டம் , வரதட்சணைச் சட்டம் மற்றும் முத்தலாக் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ருஷானா பேகத்தின் வழக்கு குறித்துப் பேசும் போது குசைகுடா பகுதியின் வட்டார ஆய்வாளரான கே சந்திரசேகர் தெரிவித்தது என்னவென்றால், ருஷானா பேகத்தின் சார்பில் புகார் ஒன்று வந்தது. கணவர் தனது பற்கள் கோணலாக இருப்பதாகக் கூறி தன் கணவர் தனக்கு முத்தலாக் அளித்து விட்டதாக தெரிவித்தார். இவர்களது திருமணத்தின் போதே ருக்ஷானாவின் பெற்றோர் முஸ்தபா குடும்பத்தினருக்கு கேட்ட வரதட்சிணையை நகைகளாகவும் பணமாகவும் அளித்தனர். ருஷானாவின் சகோதரரின் பைக்கையும் முஸ்தபா எடுத்துக் கொண்டுள்ளார். ருஷானா அவர்கள் சொல்வதை கேட்கவில்லையென்றால் 10 முதல் 15 நாட்கள் வரை வீட்டிற்குள் ஒரு அறையில் அடைத்து வைத்தும் உள்ளனர்.
இதனையடுத்துத்தான் ருஷானா வரதட்சிணை வழக்கினை பதிவு செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்த பின் கணவர் வீட்டார் சமரசம் பேச முயற்சிக்கின்றனர். தனக்கு நீதி கிடைக்கும் வரை வழக்கை திரும்ப பெறப்போவதில்லை என்று கூறியுள்ளார்