This Article is From Jul 25, 2018

அமெரிக்காவில் காணாமல் போன ஹைதராபாத் நபர்

பரிதவிக்கும் குடும்பத்தினர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் உதவி கோரியுள்ளனர்

அமெரிக்காவில் காணாமல் போன ஹைதராபாத் நபர்
Hyderabad:

ஹைதராபாத்: அமெரிக்காவில் வசிக்கும் 26 வயதான ஹைதராபாத்தைச் மிர்சா அலி, கடந்த வெள்ளிக்கிழமை முதலாகக் காணவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம், குடும்பத்தினர் கோரிக்கை.

காணாமல் போன மிர்சா அகமது அலிக்கு சில பிரச்னைகள் இருந்து வந்ததாக அவர் குடும்பத்தினர் கூறுகின்றனர். அவரது தம்பி மிர்சா சுஜ்ஜத் கூறுகையில், “2015-ல் மேற்படிப்புக்காக எங்கள் அண்ணன் அமெரிக்கா சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை போனில் பேசியபோது மன உளைச்சலோடும் குழப்பத்துடனும் அவர் இருந்தார். கடந்த ஆறு மாதங்களாவே தான் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகவும் கூறினார்” என்றார்.

மிர்சா அகமது அலி 2015-ல் ஏரோனாட்டிக் பிரிவில் பொறியியல் படிக்க பென்சில்வேனியா சென்றார். ஒரு வருடம் கழிந்து, அங்கிருந்து நியூ ஜெர்சியிலுள்ள வேறு ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.

அமெரிக்கா சென்றதில் இருந்து இதுவரை அவர் இந்தியா வரவில்லை என்றும், ஆனால் தொடர்ந்து ஃபோன் மூலம் தங்களுடன் அடிக்கடி பேசி வந்ததாகவும் அவர் குடும்பத்தினர் சொல்கிறார்கள்.

மிர்சாவின் அம்மா இதுபற்றிக் கூறுகையில் “என் மகனை அங்குள்ள நான்கு இந்தியர்கள் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக அவர் தெரிவித்தான்” என்றார்.

இதனிடையே மிர்சாவைக் கண்டுபிடுத்துத் தருமாறு சமூக வலைத்தளங்களிலும் ஏராளமானோர் சுஷ்மா ஸ்வராஜ், மற்றும் இந்தியத் தூதரகத்தினரிடம் ட்வீட் செய்து வருகின்றனர். மிர்சாவின் குடும்பத்தினர் இந்திய வெளியுறவுத் துறை நிச்சயம் அவரை மீட்டுத் தங்களிடம் சேர்க்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

.