கெளதம் குமார் ஒரு நாளைக்கு 1,000 பேருக்கு உணவளித்துள்ளார்.
Hyderabad: ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘சர்வ் நீடி' (Serve Needy) என்ற என்ஜிஓ நிறுவனத்தின் நிறுவனர் கெளதம் குமார் ஒரு நாளைக்கு 1000 பேருக்கு உணவிட்டு யுனிவர்சல் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் சாதனையை படைத்துள்ளார்.
குமார் இந்த சாதனையை ஞாயிறு அன்று மூன்று வெவ்வேறு இடங்களில் 1000 பேருக்கு உணவு கொடுத்து செய்துள்ளார். முதலில் காந்தி மருத்துவமனையில், அடுத்து ராஜேந்திர நகர் மூன்றாவதாக அம்மா நானா ஆதரவளிப்போர் இல்லம் ஆகிய மூன்று இடங்களில் உணவினை கொடுத்துள்ளார்.
யுனிவர்சல் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் கேவி ரமணா ராவ் மற்றும் தெலுங்கானா பிரதிநிதி டிஎம் ஶ்ரீலதா ஆகியோரால் வழங்கப்பட்டது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய குமார்” இந்த சேவை மையத்தை 2014 தொடங்கினேன். தற்போது 140க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டுள்ளோம். 2014முதல் இந்த வகையான சமூக நடவடிக்கைகளை நாங்கள் செய்து வருகிறோம். ஆனால் இன்று, இது ஒரு உலக சாதனையாக உள்ளது.
எங்கள் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் எமது அமைப்பு இருக்கும் போது யாரும் அனாதைப் போல் இறக்க விரும்புவதில்லை. “எங்களது அமைப்பின் நோக்கமே யாரையும் பசியால் இறக்க விடமாட்டோம்” என்பது தான். அரசு முன் வந்து அதிகமான மக்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.