ஐதராபாத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட இருதயம்
Hyderabad: ஐதராபாத்தில் இருந்து இருதயம் மற்றும் நுரையீரலை மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் 22 நிமிடங்களில் 29 கிலோமீட்டர் கடந்து கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் செல்வதற்கு சாலையின் வழித்தடங்களை ஒருங்கிணைத்து இச்சாதனை சாத்தியப்படுத்தியவர்கள் ஐதராபாத் போக்குவரத்து போலீசார் மட்டுமே என பாராட்டு.
இது குறித்து கூடுதல் போக்குவரத்து கமிஷ்னர் அனில் குமார், அவசரமான இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிட்ச்சைக்காக செய்யப்பட்ட திட்டத்தைப் பற்றி கூறினார்.
“இன்று நாங்கள் சிக்னல் உள்ள சாலைகளை ஒருங்கிணைத்து சிக்கல் இல்லாத வகையில் இருதயம் மாற்று அறுவை சிகிச்சைக்காக உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்தோம். அந்த உடல் உறுப்புக்கள் ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது முதல் நோக்கமாக இருந்தது. மருத்துவக் குழு மதியம் 3.23 மணிக்கு தயாரான உடன் சரியான இடத்தில் கிளம்பி சரியாக 3.46 மணிக்கு விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது” எனத் தெரிவித்தார்.மருத்துவக் குழு போலீசார்க்கே நன்றி தெரிவிக்க வேண்டும் என கூறினர்கள்.
இம்மாதம் 2-ம் தேதியன்று இதேபோல் நடந்த ஒரு இருதயம் மாற்று அறுவை சிகிச்சைக்காக இதேபோல் வழித்தடம் ஒருங்கிணைக்கப்பட்டது. இதனால் 47 வயது பெண் ஒருவருக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது என்பது கூடுதல் தகவல்.