This Article is From Sep 21, 2018

பிரபல உணவு நிறுவனத்தின் சாக்லேட் கேக்கில் கரப்பான் பூச்சி

வாடிக்கையாளரின் கரப்பான் பூச்சி சாக்லேட் கேக் பதிவு வைரலானது. நடந்த சம்பவத்திற்கு உணவகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

பிரபல உணவு நிறுவனத்தின் சாக்லேட் கேக்கில் கரப்பான் பூச்சி

IKEA ஐதராபாத் உணவக கேக்கில் பூச்சி இருந்ததாக வாடிக்கையாளர் ஷேர் செய்த ஃபோட்டோ.

ஹைலைட்ஸ்

  • IKEA உணவகத்தின் கேக்கில் பூச்சி இருந்ததாக வாடிக்கையாளர் புகார்
  • பில், பூச்சி கேக்குடன் வாடிக்கையாளர் டிவிட்டர் போஸ்ட் செய்துள்ளார்
  • முன்பு பிரியாணியில் பூச்சி இருந்ததாக புகார் வந்தது
Hyderabad:

ஐதராபாத்தில் பிரமாண்ட அளவில் சுவீடன் நிறுவனமான IKEA உணவகத்தை அமைத்துள்ளது. இங்கு 2 வாரங்களுக்கு முன்பாக பிரியாணியில் பூச்சி இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதே உணவகத்தின் கேக்கில் பூச்சி இருந்ததாக மற்றொரு வாடிக்கையாளர் ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார்.  

 

கடந்த 12-ம் தேதி உணவகத்துக்கு சென்ற அந்த வாடிக்கையாளர் சாக்லேட் கேக்கை ஆர்டர் செய்துள்ளார். அதை அவரது மகள் சாப்பிட்டபோது அதில் பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த கேக்கையும், பில்லையும் புகைப்படம் எடுத்து வாடிக்கையாளர் ட்விட்டரில் போஸ்ட் செய்ததோடு ஐதராபாத் மாநகராட்சிக்கும் டேக் செய்துள்ளார்.

பின்னர் கடந்த 19-ந்தேதி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு, மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட IKEA உணவகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

1h1c54q

சுவீடன் நிறுவனமான IKEA, 13 ஏக்கர் பரப்பளவில் 1000 இருக்கைகளுடன் ஐதராபாத்தில் உணவகம் அமைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், வாடிக்கையாளருக்கு நேர்ந்த மோசமான அனுபவத்திற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
முன்னதாக பிரியாணியில் பூச்சி இருந்த புகாரின்பேரில், IKEA உணவகத்திற்கு ரூ. 11,500 அபராதம் விதித்து ஐதராபாத் மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

 

.