This Article is From Dec 04, 2018

பாஜக-வுக்கு வாக்களியுங்கள்; ஐதராபாத் பெயரை மாற்றிவிடுகிறோம் - ஆதித்யநாத் பிரசாரம்

இந்திய நகரங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதில் ஆதித்ய நாத் ஆர்வமாக உள்ளார்.

பாஜக-வுக்கு வாக்களியுங்கள்; ஐதராபாத் பெயரை மாற்றிவிடுகிறோம் - ஆதித்யநாத் பிரசாரம்

பாஜகவுக்கு வாக்களித்தால் ஐதராபாத் பெயரை பாக்யா நகர் என மாற்றுவோம் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார்.

தெலங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது.இதில் மொத்தம் உள்ள 110 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடுகிறது.
இதையொட்டி பிரதமர் மோடி உள்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தும் பிரசாரம் செய்து வருகிறார்.

கோஷமகால் தொகுதியில் அவர் பேசியதாவது-

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயரை பாக்யா நகர் என்று மாற்றிவிடுவோம். 1590-ல் குதுப் ஷா என்பவர் ஐதராபாத்துக்கு வந்தார். அவர்தான் பாக்யா நகர் என்று இருந்த பெயரை ஐதராபாத் என்று மாற்றினார்.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார். தேர்தல் பிரசாரங்களின்போது இந்திய நகரங்களின் பெயர்களை மாற்றுவோம் என்ற வகையில் ஆதித்யநாத் பேசி வருகிறார்.

.