டக்சனுக்காக பிரத்யேகமாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது
ஹூண்டாய் நிறுவனம் தெரு நாய் ஒன்றை தத்தெடுத்து, அதற்கு சேல்ஸ் மேன் பொறுப்பு வழங்கியுள்ளது. சேல்ஸ் மேன் ஐடி கார்டு அணிந்தபடி நாய் போஸ் கொடுக்கும் புகைப்படும் தற்போது வைரலாகியுள்ளது.
பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சேண்டா மாகாணத்தில் செர்ரா என்ற பகுதியில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஷோ ரூம் உள்ளது. இந்த ஷோ ரூமுக்கு அருகில் தெரு நாய் ஒன்று நீண்ட காலமாக சுற்றித்திரிந்துள்ளது. மேலும், ஹூண்டாய் பணியாளர்களிடம் நெருங்கி பழகவும் ஆரம்பித்தது. இதனையடுத்து அந்த தெருநாயை ஹூண்டாய் நிறுவனம் தத்தெடுத்தது. அதற்கு டக்சன் பிரைம் என்றும் பெயரிட்டனர்.
இந்த நிலையில், டக்சன் நாய்க்கு 'சேல்ஸ் மேன்' என்ற பொறுப்பையும் வழங்கி, அதற்கான ஐடி கார்டையும் வழங்கினர். டக்சன், சேல்ஸ் மேன் ஐடி கார்டை அணிந்தபடி நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்தது. அதனை ஊழியர்கள் போட்டோ எடுக்க, டக்சனும் சேல்ஸ் மேன் பாணியில் போஸ் கொடுத்தது. இந்த போட்டோ வெளிவந்த சில மணி நேரங்களிலேயே 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களைப் பெற்றன.
மேலும், டக்சனுக்காக பிரத்யேகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கினர். அதில் டக்சன் செய்யும் சேட்டைகள் அனைத்தும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக வாடிக்கையாளர்களை வரவேற்ப்பது, மீட்டிங்கில் கலந்து கொள்வது, ஊழியர்களுடன் சகஜமாக பழகுவது என அனைத்து போட்டோக்களும் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர்.
பிரேசிலில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும். கடந்தாண்டு இதே போல் கைவிடப்பட்ட பூனைக்குட்டி ஒன்று சுற்றித்திரிந்தது. அதனைப் பார்த்த ஓரு பிரபல நிறுவனத்தின் ஊழியர்கள், அதை அப்படியே வளர்க்கத் தொடங்கினர். பின்னர், அந்த பூனைக்கு பொறுப்பு வழங்கப்பட்டு, ஐடி கார்டையும் கொடுத்தனர்.
Click for more
trending news