This Article is From Aug 05, 2020

“நான் பாஜகவில் இணையவில்லை”; திமுக எல்எல்ஏ கு.க.செல்வம் டெல்லியில் பேட்டி!

“நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக” செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

திமுக ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்லம் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்திக்க இன்று டெல்லி சென்றிருந்தார். இந்நிலையில் அவர் பாஜகவில் இணைவதாக பல தகவல்கள் வெளியாகியிருந்தன.

நட்டாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்வம் தான் பாஜகவில் இணையவில்லை என்றும், அதேபோல தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியவர்களை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும், பாரதத்தில் நல்லதொரு ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியுடனான தொடர்பை திமுக துண்டிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கட்சி தலைமைக்கு தகவல் அளிக்காமல் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தது குறித்து தங்களது கட்சி தலைமை தங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாக” செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், தனது தொகுதி குறித்து விவாதிக்கவே இங்கு வந்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement