This Article is From Feb 14, 2019

தம்பிதுரையிடம் தினமும் பேசுகிறேன்! எங்களுக்குள் சர்ச்சை இல்லை! - பொன்.ராதாகிருஷ்ணன்

தம்பிதுரை என் சகோதரர் போன்றவர். அவரிடம் தினமும் பேசி வருகிறேன். எங்களுக்குள் எந்தவித சர்ச்சையும் இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Posted by

தம்பிதுரை என் சகோதரர் போன்றவர். அவரிடம் தினமும் பேசி வருகிறேன். எங்களுக்குள் எந்தவித சர்ச்சையும் இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததுள்ளார்.

அதிமுக எம்.பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனிடையே, நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, பாஜகவை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை முழுக்க முழுக்க நாடகம். இது, பாஜக-வின் தேர்தல் அறிக்கைபோல இருக்கிறது" என்றார். ஜி.எஸ்.டி, தூய்மை இந்தியா என பாஜக. அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டார், மக்களுக்கு இந்தத் திட்டங்களினால் என்ன பயன்? எனக் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் தம்பிதுரை குறித்து கேள்வி எழுப்பிய போது, தம்பிதுரை என் சகோதரர் போன்றவர். அவரிடம் தினமும் பேசி வருகிறேன். எங்களுக்குள் எந்தவித சர்ச்சையும் இல்லை. பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையும் யாரோடும் கிடையாது. சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறோம்.

Advertisement

இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. ஓரிரு நாளில் கூட்டணி அறிவிக்கப்படும் என அகில இந்திய பொது செயலாளர் முரளிதரராவ் கூறி இருப்பது சரியாக இருக்கும்.

புதுவை முதல்வர் நாராயணசாமி 2-வது நாளாக போராட்டம் நடத்தி வருவது தேர்தல் வந்துவிட்டது என்பதை காட்டுகிறது. தேர்தல் வரும்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கை.

Advertisement

ஆஸ்திரேலிய பறவை சீசன் சமயத்தில் வனத்தை தேடி வரும் சீசன் முடிந்ததும் போய் விடும். அதுபோல் தான் நாராயணசாமி போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிப்பது ஆகும். இதுவும் தேர்தலுக்கான அறிகுறியே என்று அவர் கூறினார்.

Advertisement