This Article is From Feb 03, 2020

“ஷெரின் கூட அவர் டச்ல இருக்கிறது எனக்கு புடிக்கல” – மனம் திறந்த சனம் – வெளிவரும் ரகசியங்கள்

பார்ட்டி ஒன்றில் தானும் தன் முன்னாள் காதலரும் தனிமையில் இருந்ததாக தர்ஷன் கூறுவது முற்றிலும் பொய் என்றும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கவே அவர் இவ்வாறு கூறுவதாக சனம் தெரிவித்தார்.

“ஷெரின் கூட அவர் டச்ல இருக்கிறது எனக்கு புடிக்கல” – மனம் திறந்த சனம் – வெளிவரும் ரகசியங்கள்

நடிகை சனம் ஷெட்டி, தர்ஷன் விவகாரம் தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர், இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிக் பாஸ் பகுதி மூன்று மூலம் பிரபலமானவர் இலங்கை தமிழர் தர்ஷன். கடந்த ஜனவர் 31ம் தேதி நடிகையும் மாடல் அழகியுமான சனம் ஷெட்டி காவல் ஆய்வாளரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் பிக் பாஸ் தர்ஷனுக்கும் தனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கும் முன்பே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதாகவும், ஆனால் இப்பொது நிறைய பெயரும் புகழும் அடைந்துவிட்ட தர்ஷன் தன்னை மணந்துகொள்ள மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த மே மாதத்திற்கு பிறகு தர்ஷன் தன்னிடம் சரிவர பேசவில்லை என்றும், தன்னை வேண்டும் என்றே தவிர்ப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.

இதை பற்றி பேச இலங்கையில் உள்ள தர்ஷனின் தாயாரை நான் சந்தித்தபோது, தர்ஷன் தனது தங்கையின் திருமணத்திற்கு பின்னரே தனது திருமணத்தை பற்றி யோசிக்கவுள்ளதாகவும், ஆனால் அவர் என்னை திருமணம் முடிப்பாரா என்று தனக்கு தெரியவில்லை என்று தர்ஷனின் தாய் கூறியதாக சனம் கூறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து அவர் வந்த பிறகும், தற்போது அவர் நடிகை ஷெரின் அவர்களுடன் பேசி வருவது தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக கூறும் சனம் ஷெட்டி, பார்ட்டி ஒன்றில் தானும் தன் முன்னாள் காதலரும் தனிமையில் இருந்ததாக தர்ஷன் கூறுவது முற்றிலும் பொய் என்றும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கவே அவர் இவ்வாறு கூறுவதாக தெரிவித்தார்.

பிக் பாஸ் முடிந்து அவர் வெளியே வந்ததும் எப்போது திருமணத்தை நடத்தலாம் என்று என் பெற்றோர் என்னை கேட்டபோது, என்னை அவர் இன்னும் நியாபகம் வைத்துள்ளாரா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது என்று நான் கூறியதும் என் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள் என்று அவர் தெரிவித்தார்.

.