This Article is From Nov 23, 2018

"அதிபராவதற்கும், நிறத்திற்கும், பாலினத்திற்கும் எந்த தொடர்புமில்லை" ஒபாமா

முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஜ‌னாநாயக கட்சியினரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

"குறிப்பிட்ட பாலினம் மற்றும் நிறத்தினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்வது தவறு" என்பதை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஜ‌னாநாயக கட்சியினரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "குறிப்பிட்ட பாலினம் மற்றும் நிறத்தினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சொல்வது தவறு" என்பதை வலியுறுத்தியுள்ளார்.  "2020ம் ஆண்டு ட்ரம்ப்பை எதிர்கொள்ள ஒரு வெள்ளை நிற ஆணால் தான் முடியும்" என்ற கருத்தை எதிர்த்துள்ளார்.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் பிரிவில் உள்ள ஆய்வாளர் டேவிட் ஆக்ஸ்ராட் ஒபாமாவை எடுத்த பேட்டியில், "மீண்டும் ஒரு கருப்பினத்தவரையோ, பெண்ணையோ தேர்ந்தெடுப்பதில் யோசிக்க வேண்டும் என்ற ஜனநாயக கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்". அதற்கு பதிலளித்த ஒபாமா, "இதுபோன்ற கருத்துகளை ஏற்கமாட்டேன்" என்று கூறியுள்ளார்.

மேலும் "சிறந்த ஒருவர் தான் நல்ல வேட்பாளராக இருப்பார். அதற்கு அவர் மக்களிடம் சரியான விதத்தில், அவர்கள் பிரச்சனையைப் பேசுபவராக இருக்க வேண்டும்" என்றார். 

இந்தப் பேட்டியில் வேட்பாளருக்கு தகுதியானவர் என்று கூறப்பட்டதைத் தவிர, யார் என்பது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அட்டர்னி மைகேல் கூறும்போது '' வெள்ளைக்கார ஆண் தான் அடுத்த அமெரிக்க அதிபராக வேண்டும். ஏனெனில், அவர்களால் தான் அதிக அழுத்தத்தை தாங்க முடியும்"  என்ற தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

"அமெரிக்காவுக்கு பிரத்யேகமான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இப்போது உள்ளது. அவர் அனைத்து மதம், கலாச்சாரம், கல்வி, நிற மற்றும் ஜ‌னநாயகத்து ஆதரவான நபராக இருக்க வேண்டும்" என்று ஒபாமா கூறியுள்ளார். 

"ட்ரம்ப் எப்படி ஆட்சி நடத்துகிறார்" என்று கேட்டதற்கு, முகபாவனையில் சலிப்பை காட்டியுள்ளார் ஒபாமா.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.