This Article is From Jan 18, 2020

ரஜினிகாந்த் பிழையை உணர்ந்து வருத்தம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன்: திருமாவளவன்

சங் பரிவாரின் சதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பலியாகி விடுவார் என்பதற்கு இது ஒரு சான்று.

Advertisement
தமிழ்நாடு Edited by

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பிழையை உணர்ந்து அதற்காக வருத்தம் தெரிவிப்பார் என்று நான் நம்புகிறேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, அண்மையில் நடைபெற்ற துக்ளக் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்றார். 

அத்துடன், பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் செருப்பு மாலை போடப்பட்டது என்றும் அப்போது ரஜினி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை போரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, சமூக நீதி கோணத்தில் இருந்து பெரியாரை பார்க்க தொடங்கினால், பெரியாரின் போராட்டங்களை அவரால் புரிந்துக்கொள்ள முடியும். சமூகநீதியை வென்றெடுக்க அவர் ஏராளமான போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். 

Advertisement

அப்படி போராடியவரை கொச்சைப்படுத்தும் முயற்சியில் சங் பரிவார் அமைப்புகள் ஈடுபடுகின்றன. சங் பரிவாரின் சதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பலியாகி விடுவார் என்பதற்கு இது ஒரு சான்று என்று அவர் கூறியுள்ளார். 

குடியுரிமை சட்டம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மாறுபட்ட கருத்துகளை கூறி மக்களை குழப்பி வருவதாகவும், இச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் இரண்டாவது விடுதலை போராட்டத்திற்கு நிகரானது என்றும் தெரிவித்தார்.
 

Advertisement
Advertisement